அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோவில் (திரு வடகுரங்காடுதுறை)
God Name : தயாநிதீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
வானர அரசன் வாலி வழிபட்ட இறைவன். இதனால் இவ்வூர் குரங்காடுதுறை எனப் பெயர் கொண்டது. இரண்டு குரங்காடுதுறைகள் இருப்பதனால் வேறுபடுத்த வேண்டி இவ்வூரை வடகுரங்காடுதுறை என அழைக்கின்றனர்.
வாலி ராவணனுடன் போரிட்டபோது தனது வாலை இழந்தான். அறுபட்ட வால் வளர இறைவனை வழிபட்டு நன்மைகள் பெற்றான்.
கொடும் வெய்யிலில் நடந்து வந்த கர்ப்பிணிப் பெண் ஒருத்தி பசியும் தாகமும் மேலிட இவ்வாலயத்து மதிற்சுவரில் சாய்ந்து வீழ்ந்து "பிரபோ தயாநிதி" எனக் குரல் கொடுக்கின்றாள். தென்னை மரத்து குலைகளை, பெண்ணின் வாய்க்கு நேராக வரும்படி வளைத்து வரவழைத்து கருணை புரிந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்
மூலவர்: தயாநிதீஸ்வரர், அம்பாள்: அழகு சடைமுடியம்மை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தயாநிதீஸ்வரர். குட்டையான பாணமும் வட்ட வடிவ ஆவுடையும் கொண்டுள்ள அழகிய சிவலிங்கம்.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு தென்னங்குலையை வளைத்துக் கொடுத்தவர் என்பதால் குலை வணங்கீசர் எனவும், சிட்டுக்குருவி ஒன்று தினமும் வழிபட்டதால் சிட்டி லிங்கேசர் என்றும், வாலி வழிபட்டால் வாலீசர் எனவும், சடைமுடி கொண்டதால் அழகு சடைமுடி நாதர் என்றும் அழைக்கின்றனர்.
அம்பாள் அழகு சடைமுடியம்மை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றனர். லிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தியின் காலடியில் சனகாதி முனிவர்கள் அல்லாது கூடுதலாக நான்கு பேர் உள்ளனர். சிவகாமி சமேத நடராஜர் கற்சிலைகளாக காட்சி தருகின்றனர்.
மஹாகணபதி, வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
வாலி சிவபெருமானை வழிபடும் சிற்பமும், கர்ப்பிணிப் பெண்ணுக்காக தென்னங்குலை வளைந்த சிற்பமும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.