அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில் (திருக்கருகாவூர்)

God Name : ஸ்ரீ முல்லைவன நாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

தட்சனிடமிருந்து பெற்ற சாபம் நீங்க, இத்தலத்து இறைவனை சந்திரன் வழிபட்ட தினம் பங்குனி மாத பௌர்ணமி. அன்றைய தினம் இறைவனது திருமேனியில் சந்திரனது கிரணங்கள் படர்கின்றன. நிருத்துவர் என்ற முனிவரும் அவரது மனைவியான வேதிகையும் புத்திர பாக்கியம் வேண்டி, முல்லைவனநாதரை வழிபட்டனர். இறைவனருளால் வேதிகை கருவுற்றாள். ஒரு நாள் மனைவியை தனியே விட்டுவிட்டு நிருத்துவ முனிவருக்கு வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. அப்போது ஊர்த்துவபாதர் எனும் முனிவர் வெயிலில் நடந்து வந்த களைப்பும், பசி - தாகமும் மேலிட, நிருத்துவ முனிவரது இல்லத்திற்கு வந்து பிட்சை கேட்டார். நிறைமாத கர்ப்பிணியான வேதிகை களைப்பு மிகுந்திருந்ததாலும், வெயிலின் கொடுமையாலும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தான் பிட்சை கேட்டும் எழுந்து வராமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண் தன்னை அவமதிக்கிறாளோ என நினைத்து கோபம் கொண்ட ஊர்த்துவபாதர், "உனது கரு கலையட்டும்" என சாபம் கொடுக்கின்றார். குறை பிரசவமாக வெளியே வந்த கருவை ஒரு பானையில் வைத்து வாழை இலையால் மூடி எடுத்துக் கொண்டு போய் அம்பாளின் மார்பு மீது வைத்து கட்டிவிட்டு, ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு மனமுருக வேண்டுகிறாள். குழந்தை உருவாகும் நாள் வரை கருவை காத்து, அவயங்கள் குறைவின்றி வளரச் செய்து உயிர் கொடுக்கின்றாள் அம்பாள். இதனால் கர்ப்பரட்சாம்பிகை என்ற திருநாமம் கொண்டாள். குழந்தைக்கு பால் கொடுக்க காமதேனு பாலை சுரந்து க்ஷீர புஷ்கரிணி உருவாக்கியது. குழந்தையும் நன்கு வளர்ந்தான். நைத்ருவன் என்று பெயர். தேவாரத் திருத்தலம் - பஞ்சாரண்ய ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ முல்லைவன நாதர்் அம்பாள்: ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ முல்லைவன நாதர். உயரமான பாணமும் சதுரபீட ஆவுடையாரும் கொண்ட அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். புற்று மண்ணால் உருவான திருமேனி என்பதால் பாணத்திற்கு குவளை சாத்தி, ஆவுடையார்க்கு நித்ய அபிஷேகம் செய்கின்றனர். முல்லைக் கொடி படர்ந்த தழும்புகளை திருமேனியில் காணலாம். இவருக்கு திருமுல்லை வனமுடைய மஹாதேவர், முல்லைவனேஸ்வரர், மாதவிவனேஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. பிரதி மாதம் வளர்பிறையன்று மாலை, பிரதோஷத்தின்போது புனுகு சட்டம் சாத்துவது முக்கியமான நேர்த்திக்கடன். பங்குனி மாத பௌர்ணமியன்று சந்திரனின் ஒளி இறைவன்மீது படர்ந்து அபிஷேகம் செய்கின்றன. முல்லைப் பூக்களால் தினமும் அர்ச்சனை செய்கின்றனர். முல்லைவனநாதருக்கு இடப்பக்கமாக ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார். உயரமான அழகிய திருமேனி. ஆஜானுபாகுவான தோற்றம். மூக்குத்தி பிரகாசிக்கும் மங்களகரமான திருமுகம். தரிசிக்க மனதிற்கு சந்தோஷம் கிடைக்கின்றது. கரு காத்த நாயகி, கரும்பனையாளம்மை ஆகிய திருநாமங்களும் உண்டு. இங்குள்ள கற்பக விநாயகரும் நந்தியம்பெருமானும் சுயம்பு மூர்த்தங்கள். ஆறுமுகஸ்வாமியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. மஹா மண்டபத்தில் உற்சவத் திருமேனிகளையும், அர்த்த மண்டபத்தில் போகசக்தி அம்மனையும் தரிசிக்கலாம். பஞ்சாரண்ய ஸ்தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. விடியும் முன் உஷத்கால வேளையில் தரிசிப்பது விசேஷம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.