அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் (உமையாள்புரம்)
God Name : ஸ்ரீ காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
காசியிலுள்ள விஸ்வநாதரைப் போல இங்குள்ள இறைவன் இருப்பதாலும், கங்கையின் புனிதத்தை இங்குள்ள தீர்த்தம் கொண்டுள்ளதாலும், காசியில் இருப்பது போன்ற மயானம் இங்கிருப்பதாலும் இவ்விறைவனை காசி விஸ்வநாதர் என்றழைக்கின்றனர்.
உமாதேவி குடி கொண்ட ஊர் என்பதால் ஆதியில் உமாபுரம் என்றழைக்கப்பட்டது. உமையாள்புரம் என்று தற்போது அழைக்கப்படுகிறது.
பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமானை சந்தித்து உபதேசம் பெற ஸ்வாமிமலைக்கு வந்து கொண்டிருந்தார் (சிவன்).
'பரிவாரங்களுடன் வரக்கூடாது, தனியாகவே வர வேண்டும்' என முருகனிடமிருந்து செய்தி வந்தது.
திருவையாற்றிலிருந்து பரிவாரங்களுடன் புறப்பட்ட தனது ஏகாதச ருத்ராம்சங்களை பைரவர் என்கிற ஸ்வரூபத்தில் அடக்கி, அருகிலுள்ள வைரவன்கோயில் எனும் கிராமத்தில் விட்டு விட்டார். ஈஸ்வர அம்சமான சந்திரனை திங்களுரிலும், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகரையும், நந்தி தேவரை மணலூரிலும் விட்டுவிட்டு கடைசியாக உமையவளை இவ்வூரில் தங்க வைத்தார்.
இங்கு கோவில் கொண்ட உமையவளே குங்குமசுந்தரி எனப் போற்றப்படுகின்றாள்.
விஜயா எனும் கந்தர்வப் பெண் ஒருத்தி உமையவளுக்கு கோவில் கட்டும் ஆசையை, உமையவளிடமே தெரிவித்து, உமையவள் காட்டிய இடத்தில் (இவ்வூர்) தீர்த்தம் ஒன்றை அமைத்து, விஸ்வகர்மாவின் உதவியுடன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாக ஸ்தல வரலாறு.
நார்யா குளம் எனப்படும் விஜயாதீர்த்தம் ஆலயத்தின் தென்புறமாக உள்ளது.
இங்குள்ள மயானத்தில் வெட்டியான்கள் இல்லை. இறந்த உடல்களை கொண்டு வரும் அந்தணர்களே வெட்டியான்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்கின்றனர். காவல்காரப் பிள்ளையார் எனப்படும் மங்கள சித்தி விநாயகர் மயானமருகே எழுந்தருளியுள்ளார். இவருக்கு காணிக்கை செலுத்துகின்றனர்.
பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களில் அம்பிகையை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம்.
வைகாசி விசாகத்தின்போது திருக்கல்யாண உற்சவம் சிறப்புற நடக்கும். திருமணப்பேறு வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்கள், கல்யாணத்திற்கு வேண்டியவைகளை செய்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ காசி விஸ்வநாதர், அம்பாள்: ஸ்ரீ குங்கும சுந்தரி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். ஒளி வீசும் அழகிய திருமேனி.
நாகாபரணத்துடன் காட்சி தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி.
கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ குங்கும சுந்தரி மிகுந்த வரப்பிரசாதி.
மேற்கரங்களில் தாமரை மலரும், அட்ச மாலையும் ஏந்தி, அபய - வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்கரங்கள் கொண்டு, சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவமாக தரிசனம் தருகின்றாள்.
மேரு சக்கர யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பிரகார வலச்சுற்றில் ஸ்ரீ சித்தி கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளனர். மகா மண்டபத்தில் சூரியன், பைரவர் ஆகிய மூர்த்தங்கள் தரிசனம் தருகின்றனர்.
ராஜமகா கணபதியின் திருவுருவம் மிக அழகாக இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.