அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோவில் (திருவைகாவூர்)
God Name : வில்வவனேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஆதியில் வில்வவனமாக இருந்த இப்பகுதியில், வேடன் ஒருவன் கையில் வில்-அம்புடன் புறப்பட்டு வழியில் கண்ட மானை துரத்தலானான். அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் புகுந்தது மான். "மானைக் கொல்ல வேண்டாம்... விட்டு விடு..." என உபதேசித்தார் முனிவர். மான் தனக்கே உரியது என வாதிட்ட வேடன், மானைத் தராவிட்டால் முனிவரையும் கொன்று விடுவதாக பயமுறுத்தினான்.
திடீரென ஒரு புலி வேடன் மீது பாயலாயிற்று. பயத்தில் அலறியபடியே வேடன் அருகிலிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் விடுவதாக இல்லை... அவன் மரத்திலிருந்து இறங்குவதற்காக மரத்தடியில் காத்திருந்தது.
"தூங்கினால் மரத்திலிருந்து விழ நேரிடும், பின்னர் புலிக்கு இரையாக நேரிடும்" என பயந்த வேடன், இரவு முழுவதும் மரத்திலிருந்தபடியே வில்வ இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். மரத்தடியில் சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்கத்தின் மீது, வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் விழுந்தன. பிரத்யட்சமான சிவபெருமான் வேடனுக்கு முக்தி அளித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அடுத்த நாள் காலை முடிவடையப் போகும் வேடனின் உயிரை எடுக்க வந்த யமனை, வாசல் பக்கமாக திரும்பிய நந்திதேவர் தனது மூச்சுக் காற்றால் நிறுத்தி தடுத்து விட்டார் என்றும், கையில் கழியுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தி யமனை விரட்டியடித்து விட்டதாகவும் ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது.
மஹாசிவராத்திரி நாளன்று நான்கு கால பூஜைகளையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில் கலந்து கொண்டு, நான்குவித நைவேத்யங்களை செய்து வில்வவனேஸ்வரரை வழிபட்டால் சகல பாவங்களும் விலகும். சிவராத்திரியன்று இரவு 11.30 க்கு மேல் 1.00 மணி வரை உள்ள கால அளவை லிங்கோத்பவ காலம் என்பர். பஞ்சாட்சர தியானம் செய்ய உகந்த நேரம்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: வில்வவனேஸ்வரர், அம்பாள்: வளைக்கை நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வில்வவனேஸ்வரர். உயரமான பாணமுடன் காட்சி தரும் தேஜோமய லிங்கம். சுயம்பு மூர்த்தம். அம்பாள் வளைக்கை நாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். இவருக்கு பூவைவல்லி, பவளக்கை நாயகி, சர்வஜன ரட்சகி ஆகிய திருநாமங்களும் உண்டு.
நந்தியம்பெருமான் வாசலைப் பார்த்தபடியே உள்ளார். எல்லா நந்திகளும் திரும்பியபடியே இருக்கின்றன. சுந்தரமூர்த்தி விநாயகர், சப்த கன்னியர்கள் மற்றும் கோஷ்டத்து மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
அதிசுந்தரமான ஷண்முகர் திருவுருவம் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அமைப்பிலுள்ளது. கரங்கள், நகங்கள், ரேகைகள் எல்லாம் தத்ரூபமாக காணப்படுகின்றன. ஒரே கல்லில் உருவான மயிலும் திருவாசியும் அற்புதமான படைப்பு. மயில் இடதுபுறமாக திரும்பியுள்ளது.
கையில் கழி ஒன்றை வைத்துக் கொண்டு விரட்டும் பாவனையில், நின்ற கோலத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தரிசனம் தரும் தட்சிணாமூர்த்தி அவசியம் தரிசிக்கப்பட வேண்டியவர். மகா மண்டபத்தில் சப்த லிங்கங்களை தரிசிக்கலாம். நவகிரகங்கள் இல்லை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.