அருள்மிகு மலைமண்டலப் பெருமாள் திருக்கோவில் (சதுரங்கப்பட்டினம்)
God Name : கலியுக வரதராஜன் - ஸ்ரீ லட்சுமி நாராயணன் - ரங்கநாதப் பெருமாள் (மூன்று மூலவர்கள்)
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
பூதத்தாழ்வார் இங்கு சிறிது காலம் தங்கி இருந்ததாக கூறுகின்றனர். கிருஷ்ண தேவராயர் காலத்தில் சதிரவாசகன் பட்டணம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி சட்ராஸ் என்றானது.
மூலவர்கள்: கலியுக வரதராஜன் - ஸ்ரீ லட்சுமி நாராயணன் - ரங்கநாதப் பெருமாள் (மூன்று மூலவர்கள்)
உற்சவர்: ஸ்ரீ மலை மண்டலப் பெருமாள்
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், சேவை சாதிக்கின்றார். இடது காலை பின்னிருத்தி வலது காலை சற்று முன்னே எடுத்து வைத்து, நடக்கும் பாவனையில் காணப்படுகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
மற்றொரு மூலவரான லட்சுமி நாராயணர் - தாயார் லட்சுமியை மடியில் இருத்தி அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சயனக் கோலத்தில் ஸ்ரீ ரங்கநாதர் காட்சி தருகின்றார்.
உற்சவர் மலை மண்டலப் பெருமாள் அழகு திருவுருவமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி - பெருந்தேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ தேவி பூமியை பார்த்துக் கொண்டிருக்க, பூதேவி நம்மை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றம் கொண்டு காட்சி தருவது, சகல தோஷங்களையும் நீக்கக் கூடியது எனக் கூறுகின்றனர்.
நுழை வாசலில் துவார பாலகர்களுக்கு அருகே யோக நரசிம்மர் காட்சி தருகின்றார். விஷ்ணு துர்க்கை, லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
ஆதியில் மூலவராக லட்சுமி நாராயணப் பெருமாள் இருந்திருக்கின்றார். பின்னர் சுயம்புவாக பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற வரதராஜரை மூலவராக பிரதிஷ்டை செய்துள்ளனர். பெருமாளின் பாதமும் கருடனின் சிரசும் நேர்க்கோட்டிலுள்ளது.
பெருமாளை வணங்கிய நிலையில், நேர் எதிரே உள்ள அஷ்டநாக கருடன் திருவுருவம் அற்புதமாக உள்ளது. அஷ்ட நாகங்களை திருமேனியில் ஆபரணங்களாக கொண்டுள்ள இவரை தரிசித்தால் சர்ப்பதோஷங்கள் விலகுவதாக நம்பிக்கை. இரண்டு காதுகளில் ஒவ்வொன்றாகவும், இரண்டு தோள்களில் ஒவ்வொன்றாகவும், சிரசில் ஒன்றும் - இடுப்பில் ஒன்றுமாக பாம்புகளை அணிந்துள்ளார். இதனால் இத்தலம் சர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
வால்வரை சிகை நீண்டுள்ள பக்த ஹனுமான் திருவுருவம் மிக அழகானது.
கருவறையில் அபூர்வ வேலைப்பாடுகளுடன் கூடிய திருவிளக்கு விசேஷமானது. பிரசித்தமானது.
ஆலயத்து வெளிப்புறம் ஸ்ரீராகவேந்திரரின் சந்நிதி ஒன்றும் உள்ளது. ராகவேந்திர ம்ருத்திகா பிருந்தாவன் ஒன்றும் அருகாமையிலுள்ளது. இவ்வூரிலுள்ள வெள்ளீஸ்வரர் கோவிலும் சர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.