அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் (திருநல்லூர்)
God Name : கல்யாண சுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
எமன் என்னைக் கொண்டு போகும்முன் உமது திருவடியை எனது சிரசில் வைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம், திருசக்திமுத்த தலத்தில் பிரார்த்தித்துக் கொண்டார் அப்பர் பெருமான். திருநல்லூருக்கு வரும்படி பணித்தார் இறைவன். நல்லூருக்கு வந்த திருநாவுக்கரசர் இறைவன் முன் பணிந்து எழுந்து திருவடியைப் பெற்றார் என தல வரலாறு. எனவே அப்பர் பெருமான் திருவடி தீட்சை பெற்ற தலம் என்ற சிறப்பை பெற்ற தலம்.
இதனால் இங்கு சிவபெருமானின் திருவடி பதித்த சடாரியை பக்தர்களுக்கு சாத்தும் வழக்கத்தை கடைப்பிடிப்பது சம்பிரதாயமாக உள்ளது.
அமர்நீதி நாயனாரை சிவபெருமான் ஆட்கொண்டு அவருக்கும், அவரது மனைவி மற்றும் மைந்தனுக்கும் முக்தி அருளிய தலம். இவர்களுடைய விக்ரகங்கள் உற்சவ மூர்த்தங்களோடு உள்ளன. ஐராவதம் இவ்விறைவனை வழிபட்டு சாபத்தைப் போக்கிக் கொண்ட தலம்.
ஆலயத்தின் முன்புறம் உள்ள சப்த சாகரம் எனும் திருக்குளம் விசேஷமானது. கர்ணனை ஆற்றில் விட்டுவிட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள, குந்தி தேவியார், நாரதரின் யோசனைப்படி சிவபெருமானை வழிபட்டு பாவத்தைப் போக்கிக் கொண்டாள். குந்தி தேவியார் வேண்டியதால் ஏழுகடல் தீர்த்தத்தையும் பிரம்ம தேவன் வரவழைத்ததால் பிரம்ம தீர்த்தக் குளம் என்றும் கூறுவர். இக்குளத்தின் நான்கு திசைகளிலும் நான்கு வேதங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
தியாகராஜரை திருவாரூருக்கு எடுத்து செல்லும்போது, முசுகுந்த சக்ரவர்த்தி, இத்தலத்தில் மூன்று நாட்கள் வைத்திருந்து பூஜித்தான் எனக் கூறப்படுகிறது. முன்நாளில் சோழர்களின் தலைநகரமாக இருந்ததாம்.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: கல்யாண சுந்தரேஸ்வரர், அம்பாள்: கல்யாண சுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கல்யாண சுந்தரேஸ்வரர். நீண்ட சதுர ஆவுடையார் கொண்ட அழகிய திருமேனி. லிங்கத்திருமேனியில் சிறு துவாரங்கள் காணப்படுகின்றன. வண்டு (பிருங்கி முனிவர்) பூஜித்ததால் ஏற்பட்ட துவாரங்கள் என்பர். சுயம்பு லிங்கம். கிழக்கு நோக்கிய சந்நிதி.
திரு நல்லூர் உடைய நாயகன் என்ற திருநாமமும் உண்டு. பெரியாண்டவர், சுந்தரநாதர், பஞ்சவர்ணேஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு.
அகஸ்தியருக்கு காண்பித்த திருமணக் கோலக் காட்சியை நாமும் கண்டு மகிழலாம். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சிவபெருமானும் உமையவளும் திருமணக் கோலத்தில் அமர்ந்திருக்க, அருகே பிரம்மாவும், விஷ்ணுவும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய அகஸ்திய லிங்கம் மூல லிங்கத்தின் பின்னால் சுதையுருவில் காணப்படுகின்றது. சோமாஸ்கந்தர் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறுவதால் இவர் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம் (அதாவது காலை 6.00 முதல் 8.24 மணி வரை).
அடுத்த 6 -12 நாழிகையில் இளஞ்சிவப்பு நிறம் (அதாவது காலை 8.25 முதல் 10.48 மணி வரை).
அடுத்த 12 - 18 நாழிகையில் தங்க நிறம் (அதாவது காலை 10.40 முதல் பகல் 1.12 மணி வரை).
அடுத்த 18 - 24 நாழிகையில் நவரத்ன பச்சை நிறம் (அதாவது பகல் 1.13 முதல் 3.36 மணி வரை).
இறுதியாக 24 - 30 நாழிகையில் (அதாவது பிற்பகல் 3.37 முதல் மாலை 6.00 மணி வரை) என்னதென்று கூற முடியாத நிறம். இப்படியாக பல வண்ணங்களில் மாறுகின்றார்.
அம்பாள் கல்யாண சுந்தரி தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார். திருப்புரசுந்தரி, கிரிசுந்தரி ஆகிய பெயர்களும் உண்டு.
இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ மாகாளி மிகவும் சக்தி வாய்ந்தவள். நல்லூர் தட்சிண காளி எனப் போற்றுவார்கள். கருவுற்ற பெண்மணிகள் சுகப்பிரசவம் வேண்டி சந்நிதியின் படியை நெய் பூசி மெழுகி பிரார்த்தித்துக் கொள்வார்கள். இவளது சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்வார்கள். வடக்கு பார்த்த சந்நிதி.
இங்கு சாளக்கிராம விக்ரஹமாக அழகிய கணநாதர் எழுந்தருளியுள்ளார். இவ்வூரில் பசு வைத்துள்ளவர்கள் ஒரு வேளை கறக்கும் பாலை கணநாதருக்கு தந்து விடுகின்றனர். வருடத்திற்கு ஒரு நாள் நடக்கும் இரவு நேர பூஜைக்கு தருகின்றனர் (சுக்ல பக்ஷ துவாதசி).
சனீஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே மஹாலட்சுமி சந்நிதி கொண்டிருப்பதால் சனிக்கிரக தோஷங்கள் நீங்க பரிகார தலமாக கூறப்படுகிறது. சதுர தாண்டவம் ஆடும் நடராஜர் அற்புதமான அழகோடு உள்ளார்.
கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சுவாமி சந்நிதானம் மலை போல் உயர்ந்து இருக்கின்றது. தட்சிண கைலாசம் என்று போற்றப்படும் தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.