அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் (ஆவூர்)

God Name : பசுபதீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

பிரம்மாண்டமான வாஜபேய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த வசிஷ்ட மகரிஷி, காமதேனுவை அனுப்பி யாகத்திற்குண்டான பொருட்களை கொண்டு வருமாறு பணித்தார். வெகு நேரமாகியும் காமதேனு வராததால், பூவுலகிலேயே வசிக்கும்படி சாபம் கொடுத்து விடுகிறார். சாப விமோசனம் பெறும் வழியை பிரம்மன் மூலமாக கேட்டறிந்து கொண்ட காமதேனுப் பசு, இங்குள்ள அசுவத்தவனம் வந்தடைந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இவ்விறைவனை வழிபட்டது. தானே தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டது. பசு வழிபட்டு சாப விமோசனம் அடைந்ததால் பசுபதீஸ்வரம் என்ற பெயர் வந்தது. ஆ (பசு) வழிபட்ட ஊர் ஸ்ரீ ஆவூர் என்பதும் பசுபதீஸ்வரத்தின் மறு பெயரே. தசரத சக்ரவர்த்தி தேரில் வரும்போது சக்கரத்தில் ஏதோ இடறியதால், தேரை நிறுத்தி தோண்டிப் பார்த்ததில் சிவலிங்கம் தென்பட்டது. தசரதர் லிங்கத்தை வழிபடும் கல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. ஆவூர் கிழார், பெருந்தலை சாத்தனார் போன்ற சங்ககால புலவர்கள் ஆவூரைச் சேர்ந்தவர்களே. தேவாரத்திருத்தலம்.
மூலவர்: பசுபதீஸ்வரர், அம்பாள்: (இரண்டு) பங்கஜவல்லி, மங்களாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பசுபதீஸ்வரர். அஸ்வந்தநாதர் என்ற திருநாமமும் உண்டு. தெற்கு நோக்கிய தனித்தனி சந்நிதிகளில் பங்கஜவல்லியும், மங்களாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்துக்கு நேர் எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் பஞ்ச பைரவர்கள் ஒரே பீடத்தில் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். தேய்பிறை அஷ்டமி தினங்களில் வணங்குபவர்களுக்கு துன்பங்கள் விலகும். வீராசனத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விக்ரஹம் மிகவும் அழகாக இருக்கின்றது. வெளிப் பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ள தனுசு சுப்ரமண்யர் ஆஜானுபாகு திருமேனியுடன் வில் அம்பு ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகின்றார். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ முத்திரண்டர் முருகன் சந்நிதி முகமண்டபமருகே சண்டிகேஸ்வரராகக் காணப்படுகிறார். சூரியன், நால்வர், சப்த மாதர்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். நிருதி விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. படிக்கட்டுக்கள், கொடிமரம் போன்ற இடங்களில் சிவலிங்கத் திருமேனி மீது பசு ஒன்று பால் சொரிந்து வழிபடுவது போல் சிற்பம் காணப்படுகின்றன. கோச்செங்கணான் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. 1500 வருட பழமையான கோவில் என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.