அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் திருக் கோவில் (நாதன் கோவில்)

God Name : மூலவர்: ஸ்ரீ விண்ணகரப் பெருமாள், ஸ்ரீ நிவாசன், உற்சவர்: ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மஹாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்ற நந்தி தேவர், துவாரபாலகர்களான ஜயன் - விஜயன் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முற்பட்டதால் அவர்கள் தடுத்தனர். தடுத்தவர்களிடம் தர்க்கம் செய்து, அவதியுறுமாறு சபிக்கப்பட்டார். சாப விமோசனம் வேண்டி திருமாலை நோக்கி நீண்ட தவம் மேற்கொண்டார் நந்தி தேவர். பிரத்யட்சமான திருமாலிடம் பிரார்த்தித்து சாபத்தைப் போக்கிக் கொண்டார் நந்தி தேவர் என ஸ்தல வரலாறு. மஹாலட்சுமி இத்தலத்திற்கு வந்து செண்பக மரத்தடியில் அமர்ந்து கடுந்தவம் புரிந்து, திருமாலையே மணம் புரிகின்றார். ஸ்ரீயாகிய திருமகளை மணந்ததால் ஸ்ரீநிவாசன் என்றும், திருமகளின் நாதன் ஆனதால் நாதன் என்றும் திருநாமங்கள் கொண்டார். நந்தி வழிபட்டு பலன் பெற்ற ஸ்தலமாதலால் நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் வந்தது. புறாவிற்கு நியாயம் வழங்க தராசுத்தட்டில் தானே ஏறி உட்கார்ந்து உயிர் துறந்த சிபி சக்கரவர்த்தியின் செயலைக் கண்டு அதிசயித்து, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கே திருமுகம் கொண்டதாகக் கூறுகின்றனர். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ விண்ணகரப் பெருமாள், ஸ்ரீ நிவாசன், உற்சவர்: ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள். தாயார்: ஸ்ரீ செண்பகவல்லி. மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ விண்ணகரப் பெருமாள் எனப்படும் ஸ்ரீ நிவாசர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சங்கு - சக்கரதாரியாய் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மார்க்கண்டேய மகரிஷிக்கும், சிபி சக்கரவர்த்திக்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம். மூலவருக்கு முன்பாக ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதம் சேவை சாதிக்கும் உற்சவ மூர்த்தியான ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் திருவுருவம் மனசிலேயே நிற்கிறது. மனித உருவில் காட்சி தரும் நந்தி தேவரை கருவறையில் சேவிக்கலாம். கருவறையின் பக்க சுவரில் மூலவரை வணங்கிய நிலையிலும், விமானத்திலும் நந்தி தேவரைக் காணலாம். கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் தனிக் கோவில் கொண்டுள்ள செண்பகவல்லித் தாயார் மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். தபஸ் செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றார். செண்பக மரத்தின் கீழ் அமர்ந்து தபஸ் செய்தவள் என்பதால் செண்பகவல்லி எனப் பெயர் கொண்டாள் போலும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.