அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் (கும்பகோணம்)
God Name : காசி விஸ்வநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
காயாரோஹணம், காரோஹணம் என்றெல்லாம் கூறப்படும் காரோணம் எனப்படுவது தமிழகத்தில் மூன்று இடங்களில் உள்ளது. அவை நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், காஞ்சிக் காரோணம் என்பவை.
மகா சங்கார காலத்தில் ஆன்மாக்களை தம்முள் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவபெருமான். இந்த நிகழ்வை காயாரோகணம் என்பர்.
காயா என்றால் உடல், ரோகணம் என்றால் ஏற்றுக் கொள்ளுதல். ஸ்ரீ ராமரின் காயத்தை அதாவது உடலை தமது மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார் சிவபெருமான். இதனால் இங்குள்ள ஸ்வாமிக்கு 'காயாரோகணேஸ்வரர்' என்றும் ஊருக்கு 'காரோணம்' என்றும் பெயர் வந்தன.
சீதா தேவியை ராவணன் கவர்ந்து சென்ற பிறகு, அவளை தேடியலைந்த ராம - லக்ஷ்மணர்கள் இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டனர். அரக்கர்களுடன் போர் செய்ய இருப்பதால் தனக்கு ருத்ராம்சத்தை அளிக்குமாறு ஸ்ரீ ராமர் வேண்டினார். சிவபெருமான் ஸ்ரீ ராமரின் காயத்தில் பிரவேசித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மகாமகத்தன்று நவகன்னியர்கள் ஆரவாரமாக வருவதைப் பார்த்த அம்பிகை, இறைவனை ஆரோஹணம் செய்து கொண்டதால் காயாரோகணம் எனப் பெயர் வந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
நாகநாதஸ்வாமி ஆலயம் தவிர்த்து, மற்றைய சிவாலயங்கள் அனைத்திலும் மகாமக உற்சவத்து முதல் அநுக்ஞை - மிருத்சங்கரணம் (யாகசாலையில் பயன்படுவது) செய்யத் தேவையான புற்றுமண் இந்த ஆலயத்திலிருந்து கொண்டு செல்கின்றனர்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: காசி விஸ்வநாதர், அம்பாள்: காசி விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். பாணம் சுயம்புவானது. ஆவுடையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாணத்தில் கண்கள், காதுகள், மூக்கு போன்ற அவயங்கள் இருப்பது தனி சிறப்பு. வினைகளை நீக்கியருளும் வரபிரசாதியாக அன்னை காசி விசாலாட்சி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஸ்ரீ ராமர் வழிபட்ட மஹாலிங்கம் உயரமான பாணத்துடன் காட்சி தருகிறது. இந்த க்ஷேத்ரலிங்கம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதாக ஐதீகம். க்ஷேத்ர மஹாலிங்கத்தை வேம்பு மரத்தடியில் தரிசிக்கலாம்.
நவநதிகளும் நவ கன்னிகைகளாக சுதை சிற்பங்களாக காட்சி தருகின்றனர். நடுநாயகமாக காவேரியும், வலப்புறமாக கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி மற்றும் இடப்புறமாக கிருஷ்ணா, கோதாவரி, சரயு, துங்கபத்ரா ஆகிய நவநதிகளும் நவகன்னிகைகளாக இடம் பெற்றுள்ளனர்.
மகாமகம் வரும் நாளின் முதல் ஒரு வருடத்திற்கு நவகன்னிகைகளுக்கு தைலம் பூசுவார்கள். யாத்திரை புரிவோர் எண்ணெய் வாங்கி தருவார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.