அருள்மிகு வியாசேச்வரர் திருக்கோவில் (இலந்துறை)
God Name : ஸ்ரீ சுந்தரேச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
 ்
 ்
்
 ்
மூலவர்: ஸ்ரீ சுந்தரேச்வரர், அம்பாள்: ஸ்ரீ அபிராமி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சுந்தரேச்வரர். மிகப் பெரிய லிங்கத் திருமேனி.
10 முழ வேட்டியை கச்சமாக கட்டி அலங்கரிக்கின்றனர். கிழக்கு நோக்கிய சந்நிதி. வேத வியாசர் வழிபட்டு ஆராதித்தமையால் வியாசேச்வரர் என்ற திருநாமமும் உண்டு. சித்திரை வருடப் பிறப்பன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
நுழைவாசலின் தெற்கில் மங்கள கணபதி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், மேதா தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகிய மூர்த்தங்களை பிரகார வலச்சுற்றில் காணலாம்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீ அபிராமி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கார்த்திகை மாத செவ்வாய் கிழமைகளில் அன்னைக்கு சிறப்பு அபிஷேகங்கள், சந்தனக்காப்பு ஆகியன செய்து சுண்டக் காய்ச்சிய பாலை நைவேத்தியம் செய்கின்றனர்.
பிரகாரத்தில் உள்ள தனி சந்நிதியில் ஸ்ரீ பத்ரி நாராயணர் சேவை சாதிக்கின்றார். துளசிமணி மாலை மார்பை அலங்கரிக்க, துளசி செண்டு - அபய கரம் ஆகியன கொண்டும், பாதங்களை சுட்டிக் காட்டியபடி காட்சி தருகின்றார். கிழக்கு நோக்கிய சந்நிதி. ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
வியாச தீர்த்தக் கரையில் இலந்தை மரம் ஒன்றும், அதனடியில் இலந்தேசுவரரையும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.