அருள்மிகு வேலாயுதஸ்வாமி திருக்கோவில் (தண்டந்தோட்டம்)

God Name : மலையாள சாஸ்தா அய்யப்பன்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

கிராம தேவதையான அய்யனார் எல்லைப்புறத்தில் கோவில் கொள்வது வழக்கம். இங்கு ஊருக்குள் கோவில் கொண்டுள்ள மலையாள சாஸ்தா அய்யப்பனை இவ்வூர் மக்கள் வேலாயுதஸ்வாமி என்று கும்பிடுகின்றனர். கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தின் மூலவரான அய்யனாரை வேலாயுதன் என்று வணங்குகின்றனர். கையில் வேலும் பீடத்தில் மயிலும் செய்து வைத்துள்ளனர். யானை வாகனமும் பலி பீடமும் உள்ளன. வெளி மண்டபத்தில் பூரணா-புஷ்களா சமேத அய்யனார் எழுந்தருளியுள்ளார். சாட்டையுடன் இருக்கும் சாஸ்தாவின் வித்தியாசமான கோலம் அழகாக உள்ளது. பெரிய குதிரை சிலை ஒன்றும் உள்ளது. இடும்பனும் சப்த கன்னியர்களும் இடம் பெற்றுள்ளனர். இங்குள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதம் வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். ருக்மணி-சத்யபாமா உடனாய நவநீத கிருஷ்ணன் உற்சவராக சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ லட்சுமி நாராயணர், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.