அருள்மிகு வெங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கோவில் (உப்பிலியப்பன் கோவில்)
God Name : மூலவர்: ஒப்பிலியப்பன்் உற்சவர்கள்: பொன்னப்பன், முத்தப்பன், விண்ணகரப்பன்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
துளசி தேவி இத்தலத்தில் துளசி செடியாகத் தோன்றி தவம் இருந்தமையால், இத்தலத்தை துளசிவனம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, துளசி வனத்தில் குழந்தை வடிவில் அவதரித்த திருமகளை கண்டெடுத்தார். பூமியிலிருந்து தோன்றியதால் பூமி தேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
வயதான பிராம்மணனின் தோற்றம் கொண்டு அங்கு வந்த திருமால், அப்பெண்ணை தனக்கு மணம் புரிவிக்கும்படி கேட்டார். தன்னுடைய மகள் ஏதுமறியா சிறுமி என்றும், அவளுக்கு சமையல் தெரியாது என்றும், அன்னம் - காய்கறி ஆகியவற்றுள் உப்பிடத் தவறிடவும் கூடும் என்றும் கூறி தட்டிக் கழிக்கப் பார்த்தார் மகரிஷி.
'உப்பில்லாத உணவினை விருப்பத்துடன் உண்பேன், எனக்கு மணம் முடித்து வையுங்கள்' எனக் கூறி தனது சுயரூபத்தைக் காட்டினார் திருமால். திருமாலை சேவித்து மகிழ்வுற்ற மார்க்கண்டேய மகரிஷி இருவருக்கும் திருமணத்தை இனிதே முடித்து வைத்தார். அதே கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
இன்று வரை கோவிலில் உப்பில்லாத பண்டங்கள் படைக்கப்படுகின்றன. இதனால் 'உப்பிலியப்பன்' என்று அழைக்கின்றனரோ? கோவிலுக்குள் பிரசாதம் சாப்பிடும்போது உப்பு சேர்த்த சுவையும், வெளியே எடுத்துப் போய் சாப்பிட்டால் உப்பில்லா சுவையுமாக மாறுவதும் இத்தலத்தின் சிறப்பு.
வைகுந்தப் பெருமாளே எழுந்தருளியுள்ளதாலும், தேவர்கள் ஒன்று கூடி திருமணத்திற்கு வருகை புரிந்து இவ்வூரை தேவலோகம் போல் மாற்றியதாலும் 'திருவிண்ணகரம்' எனப் பெயர் கொண்டதாக கூறுவர்.
பெருமாள் அவதரித்த நட்சத்திரமும், திருக்கல்யாணம் செய்து கொண்ட நட்சத்திர நாளான திருவோண தினத்தன்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அன்று பகல் 11 மணி அளவில் வால்பந்தத்துடன் சிரவணதீபம் எடுப்பது விசேஷம்.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: ஒப்பிலியப்பன், உற்சவர்கள்: பொன்னப்பன், முத்தப்பன், விண்ணகரப்பன், தாயார்: பூமி தேவி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஒப்பிலியப்பன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம் கொண்ட மேற்கரங்களுடனும், ஊரு ஹஸ்தமாக இடது கரத்தைக் கொண்டும், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற கீதையின் ஸ்லோகப் பகுதி வைரங்களால் பொறிக்கப்பட்ட வலது கரத்துடனும் கூடிய சதுர்புஜங்களைக் கொண்ட, எட்டடி உயரமான அழகிய திருமேனியுடன் காட்சி தருகின்றார்.
'ஒப்பார் இல்லாத அப்பன்' என்பது மருவி 'ஒப்பிலியப்பன்' என்றானது. தற்போது 'உப்பிலியப்பன்' என்று அழைக்கப்படுகிறது.
திருவிண்ணகரப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன் ஆகிய ஐந்து அர்ச்சா வடிவங்களில் நம்மாழ்வாருக்கு சேவை சாதித்ததாக ஐதீகம். கருடன், காவேரி, தர்ம தேவதை, மார்க்கண்டேயர் ஆகியோர்க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
அருகே வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நாச்சியாரும் மற்றும் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் மார்க்கண்டேய மகரிஷியும் காட்சி தருகின்றனர். வழக்கமாக பெருமாளுக்கு இடப்புறமாக இருக்கும் பூதேவி, இத்தலத்தில் விஷ்ணுவை மணந்ததால், மணப் பெண்ணுக்குரிய வலப்புறத்தில் இடம் பெற்றுள்ளார்.
உட்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் தெற்கிலும், வடக்கில் ஆழ்வார்களும் ஸ்ரீ ராமரும் சந்நிதி கொண்டு சேவை சாதிக்கின்றனர். கிழக்கில் ராமாநுஜரை சேவிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் மணியப்பன், என்னப்பன், பெரிய திருவடி, நர்த்தன கிருஷ்ணன் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.