அருள்மிகு அகிலாண்டேஸ்வரி திருக் கோவில் (கருவளச்சேரி)
God Name : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை அகிலாண்டேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகு திருவுருவமாகவும், சாந்த ஸ்வரூபியாகவும் காட்சி தருகிறாள். மிகுந்த வரபிரசாதியாக விளங்கும் அன்னையின் சந்நிதி சாந்நித்யம் கொண்டது. கருவில் இருக்கும் சிசு வளர இந்த அன்னையை வேண்டினால், வேண்டியவர்க்கு வேண்டியபடியே வரம்தரும் அன்னை கோவில் கொண்ட ஊர் என்பதால் கருவளச்சேரி எனப் பெயர் கொண்டது. காஞ்சி மஹாஸ்வாமிகள் ஸ்ரீ சக்கர மேரு ஒன்றை இக்கோவிலுக்கு வழங்கியுள்ளார். அன்னை அகிலாண்டேஸ்வரியின் பாதத்தில் மேருவை பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்படும் குங்குமம் இந்த மேருவில் விழுந்து அதுவே பிரசாதமாக தரப்படுகிறது. ஆவணி புனர்பூசம், நவராத்திரி தினங்கள் மற்றும் மாசி சிவராத்திரி போன்ற நாட்களில் அன்னையின் முழு திருவுருவத்தை தரிசிக்கலாம். அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு சட்டம் மற்றும் சாம்பிராணி தைலக்காப்பு செய்கின்றனர். பௌர்ணமி தினங்களில் தைலக்காப்பு செய்கின்றனர். புத்ர பாக்யம் வேண்டுவோர், பித்தளை காப்பு போடப்பட்ட தேவி சந்நிதியின் வாசப்படியில் பசுநெய்யால் மெழுகி கோலம் போட்டு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பின் அர்ச்சனை செய்கின்றனர். மஞ்சள், எலுமிச்சம்பழம் மற்றும் அர்ச்சனை பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். (அர்ச்சகர் சொல்லும் பொருட்கள்) வளைகாப்பு வைபவத்தின்போது தேவிக்கு ஏழு வளையல்கள் தர வேண்டும். குழந்தை பிறந்ததும் தொட்டில் காணிக்கையும் செலுத்துகின்றனர். ஸ்ரீ அகஸ்தீஸ்வரர், லோபமுத்ரையுடன் அகஸ்தியர் ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.