அருள்மிகு ராமநாதஸ்வாமி திருக்கோவில் (திருநறையூர்)
God Name : மூலவர்: ராமநாதஸ்வாமி் சிறப்பு மூர்த்தம்: குடும்ப சனீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஸ்ரீ ராமபிரான் ராவண வதம் முடித்து அயோத்தி திரும்புகையில், தனது தந்தையார் வழிபட்ட ஸ்தலமான இத்தலத்திற்கு வந்து, மண்ணால் லிங்கம் ஒன்றை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
கால சக்கர நியதிப்படி சனீஸ்வரன், கிருத்திகையிலிருந்து ரோஹிணி நட்சத்திரத்தில் சகடத்தை உடைத்து சஞ்சாரம் செய்ய இருப்பதாக ஜோதிடர்கள் மூலமாக தெரிந்து கொண்டார் தசரத சக்ரவர்த்தி. அவ்வாறு நடந்தால் நாட்டில் பஞ்சம் உண்டாகுமே எனக் கவலையுற்றார். அதை தடுக்க, சனீஸ்வரருடன் போர் தொடுக்கலானார்.
சம்ஹார அஸ்திரம் ஏவத் தயாராக நின்ற தசரதனின் துணிவைப் பாராட்டிய சனீஸ்வர பகவான், தசரதன் வேண்டியபடி, அவனது நாட்டில் பஞ்சம் வாராதிருக்க ரோஹிணியை பிளந்து கொண்டு போவதில்லை என உறுதி அளித்தார்.
இதனால் மகிழ்வுற்ற தசரதன் சனீஸ்வரரை துதித்து ஸ்லோகம் பாடி வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.
மூலவர்: ராமநாதஸ்வாமி் சிறப்பு மூர்த்தம்: குடும்ப சனீஸ்வரர்் அம்பாள்: பர்வதவர்த்தினி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ராமநாதஸ்வாமி எழுந்தருளியுள்ளார். மண்ணால் உருவாக்கப்பட்ட லிங்கம் இது.
ஸ்ரீ ராமரால் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீ ராமரால் பூஜிக்கப்பட்டதால் ராமநாதஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பர்வதவர்த்தினி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
வலச்சுற்றில் ஹனுமன் வழிபட்ட லிங்கம், பைரவர், விஷ்ணு துர்க்கை மற்றும் ரிஷப வாகனத்தில் மேதா தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நவகிரக மேடையில் உஷா - பிரத்யுஷா தேவிகளுடன் சூரிய பகவான் தரிசனம் தருகின்றார்.
குடும்ப சமேதர சனீஸ்வர பகவான் தனிக்கோவில் கொண்டு மங்கள ரூபனாக தரிசனம் தருகின்றார். மந்தா தேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவிகளும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களும் உடன் உள்ளனர். இரும்பினால் உருவான தனிக்கொடிமரம் சனீஸ்வரருக்கு உள்ளது. காக வாகனம், பலி பீடம் கொண்ட சந்நிதி. தசரதரின் திருவுருவமும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.