அருள்மிகு சாரநாதப் பெருமாள் திருக்கோவில் (திருச்சேறை)

God Name : மூலவர்: சாரநாதர், உற்சவர்: மாமதலைப் பிரான்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

க்ஷேத்ரம், பெருமாள், தாயார், விமானம், தீர்த்தம் - ஆகிய ஐந்தும் சார எனும் அடைமொழியுடன் ஆரம்பிப்பதால் பஞ்ச சார க்ஷேத்ரம் எனப்படுகிறது. கல்ப முடிவில், நான்கு வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஆவாஹனம் செய்து பரதக் கண்டத்தில் ஸ்தாபனம் செய்யும் பணியில் பல ஸ்தலங்களுக்கும் சென்று மண் எடுத்து குடம் செய்து அதனுள் இவற்றை ஆவாஹனம் செய்ய முற்படும்போது, குடங்கள் விரிசலடைந்தன. பின்னர் மஹாவிஷ்ணுவின் யோசனையின் பேரில் சார புஷ்கரிணியில் மண் எடுத்து, குடம் செய்து வேதங்களை ஆவாஹனம் செய்தார். குடம் விரிசலடையாமல் இருந்தது. குடம் செய்வதற்கு சேறு தந்ததால் - சேறு தந்த ஊர் - சேறையூர் என்றாகி தற்போது திருச்சேறை என்றழைக்கப்படுகிறது. கங்கையை விட உயர்ந்த ஸ்தானம் - அதாவது கங்காதிக்யம் வேண்டிய காவேரி இத்தலத்திற்கு வந்து சார புஷ்கரிணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து தவமியற்றினாள். அப்போது சர்வ அலங்காரங்களுடன் கூடிய அழகிய குழந்தை ஒன்று அவள் முன்பாக தவழ்ந்து சென்றது. ஒளி வீசும் அழகிய குழந்தையை (மா மதலை) கண்டதும் காவேரி, சுயரூபம் காட்ட வேண்டினாள். கருடாரூடராய் சேவை சாதித்த மாமதலைப் பிரான் காவேரிக்கு கங்காதிக்யம் வழங்கினார். அவள் விரும்பியபடி இந்த க்ஷேத்ரத்திலேயே தங்கி சேவார்த்திகளுக்கு சேவை சாதிப்பதாக ஸ்தல வரலாறு. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச சார க்ஷேத்ரம்.
மூலவர்: சாரநாதர், உற்சவர்: மாமதலைப் பிரான், தாயார்: சார நாயகி. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சாரநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வடபுறமாக காவேரித் தாயாரும், தென்புறமாக மார்க்கண்டேயரும் சிலா வடிவங்களாக இடம் பெற்றுள்ளனர். மார்க்கண்டேயருக்கும் காவேரி தாயாருக்கும் பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம். ஸ்ரீ தேவி - பூதேவி - நீளா தேவி சஹிதமாக உற்சவ மூர்த்தி சேவை சாதிக்கின்றார். அழகான திருவுருவங்கள். மாமதலைப்பிரான் எனும் திருநாமம். தவழும் கோலத்தில் சந்தான கிருஷ்ணர் காட்சி தருகின்றார். தாயார் சார நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். ருக்மணி - சத்யபாமா சமேத ராஜகோபாலஸ்வாமி, பாலாஜி, யோக நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்தியான கோதண்டராமர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சடைமுடி கொண்டும் மரவுரி தரித்தும் வனவாச கோலத்தில் காணப்படுகின்றார். ஸ்தல விருட்சத்தின் கீழ் அழகான சிலா வடிவங்களாக காவேரித் தாயாரும், அவளுக்கு சேவை சாதித்த வண்ணம் பிரம்மா - விஷ்ணு வடிவங்களும் காணலாம். புஷ்கரிணியின் மேற்கு கரையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் மிகுந்த வரபிரசாதி.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.