அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோவில் (ஆப்பாடி - திருவாய்ப்பாடி)
God Name : பாலுகந்தநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மண்ணியாற்றின் தென்கரையில் பசுக்கூட்டங்களை மேய்த்து வந்த விசாரசர்மன் எனப்பட்ட சண்டிகேஸ்வரர், ஆத்திமர நிழலில் வெண்மணல் கொண்ட சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்ட ஸ்தலம். இதனால் இத்தலத்தில் இறைவனருகே சண்டிகேஸ்வரர் காணப்படுகின்றார்.
விசாரசர்மன் எனப்பட்ட சண்டிகேஸ்வரர் பசுக்களை மேய்த்த ஸ்தலம் என்பதால் ஆப்பாடி எனப் பெயர் பெற்றது. (ஆ என்றால் பசு)
சண்டிகேஸ்வரருக்கு பதவி அளித்த ஸ்தலம்.
இவ்வூரைச் சேர்ந்த இடையன் ஒருவன், பாலைக் கறந்து கொண்டு வரும் வழியில், தினந்தோறும் குறிப்பிட்ட இடம் வந்ததும், கால் தடுக்கி மொத்த பாலும் கீழே கொட்டி விடும். தினமும் இச்சம்பவம் தொடர்ந்து நடப்பதால் தடுக்கிய இடத்தை வாள் கொண்டு கீறிப் பார்த்ததில், சிவலிங்கம் ஒன்று புதையுண்டு இருப்பது தெரிய வந்தது. அதை வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து எழுப்பப்பட்ட ஆலயம். இடையனின் பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் என்ற திருநாமம் வந்தது. இவரை தரிசிப்பவர்கள், 1008 சிவாலயங்களை தரிசித்த பலனைப் பெறுவர்.
சிவராத்திரி அமாவாசை தினத்தன்று இறைவனும் இறைவியும் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அடியாரை தொட்டு அருள் பாலித்த ஸ்தலம். அன்றைய தினம் சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற ஸ்தலம். அன்றைய தினம் பிரம்மோத்ஸவ தீர்த்த உற்சவம் நடைபெறுகிறது.
மூலவர்: பாலுகந்தநாதர், அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான பாலுகந்தநாதர். ஒளி வீசும் அழகிய லிங்கம். கற்பூர ஆரத்தியின் போது பிரகாசமாக காட்சி தரும் திருமேனி. க்ஷீரபுரீஸ்வரர் என்றும் அழைப்பர். கிழக்கு பார்த்த சந்நிதி. வலது பக்கமுள்ள சந்நிதியில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் அம்பிகை பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி.
ஆத்திமர நிழலில் இறைவனை வழிபடும் நிலையில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். பிரகாரத்தில் அவருக்கென உரிய இடத்தில் மற்றொரு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற ஸ்தலம்.
நடராஜர் சபையில் நடராஜர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். வெளவால் நெத்தி மண்டபத்தின் சிற்பங்கள் அனைத்தும் அற்புதமானவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.