அருள்மிகு சத்யகிரீஸ்வரர் திருக்கோயில் (திருசேய்ஞ்சலூர் - சேங்கனூர்)

God Name : சத்தியகிரீசுரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

சேய் (குமரக் கடவுள்) தாம் உறைவதற்கு நல்ல ஊர் இது என உவந்தமையால், திரு சேய் நல்லூர் எனப் பெயர் கொண்டு, பின் மருவி சேய்ஞ்சலூர் என்றாகி, தற்போது சேங்கனூர் எனப்படுகிறது. பிரணவ மந்திரம் உபதேசித்தபோது தந்தையை சீடனாக்கியதால் ஏற்பட்ட சிவதுரோக தோஷத்தைப் போக்கிக்கொள்ள முருகன் தீர்த்தம் ஒன்றை அமைத்து இத்தலத்தில் சிவபூஜை செய்தமையால், சேய் (ஆகிய முருகன்) நல் ஊர் எனப் பெயர் கொண்டு, சேய்ஞ்சலூர் என்றாகி, தற்போது சேங்கனூர் எனப்படுகிறது என்று கூறுகின்றனர். குமரக் கடவுள் சிவபெருமானை பூஜித்து சர்வ சங்காரப் படைக்கலம் பெற்ற ஸ்தலம். சண்டேசுர நாயனாரின் அவதார ஸ்தலம். வைணவப் பெரியார் பெரிய வாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம். வாயுவிற்கும் ஆதிசேஷனுக்கும் ஏற்பட்ட போட்டியில், மேரு மலையின் சிகரங்களை வாயு அசைத்து தூக்கி எறிந்ததில், மலையின் ஒரு சிகரமான 'சத்யம்' எனப்படும் சிகரம் விழுந்த இடத்தில் கோவில் கொண்டமையால், இவ்விறைவனுக்கு சத்தியகிரீஸ்வரர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. சண்டேசுர நாயனாரின் அவதார ஸ்தலம். எச்சதத்தன் என்பவரின் பிள்ளையாகப் பிறந்து விசாரசருமன் எனப் பெயர் கொண்டு வளர்ந்த சிறுவன், தனது ஏழு வயதிலிருந்தே பசுக்களை மேய்க்கும் பொறுப்பை மேற்கொண்டான். பசுக் கூட்டத்தில் ஒரு பசு, ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், தினமும் தானாகவே பாலைப் பொழியும் வழக்கம் கொண்டிருந்தது. இதை கவனித்த சிறுவன் விசாரசர்மன், வெண்மணலால் ஒரு சிவலிங்கம் செய்து அதை ஆத்திமரத்தடியில் நிறுவி, தானாக பாலைப் பொழியும் பசுவின் பாலை ஒரு குடத்தில் பிடித்து, தான் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தான். தினமும் ஒரு பசுவின் மடி வற்றிப்போய் பால் இல்லாதிருப்பது கண்டு, சிறுவன் மீது சந்தேகம் கொண்டான் பசுக்களின் எஜமானன். ஒரு நாள் சிறுவனை பின் தொடர்ந்து சென்றான் எச்சதத்தன். அங்கு நடந்தவைகளைக் கண்டு கோபமுற்று, அபிஷேகம் செய்ய வைத்திருந்த பாற்குடத்தை எட்டி உதைத்தான். கண்களை மூடிக் கொண்டு தியானத்திலிருந்த சிறுவன், செய்தது தந்தை என்று கூட கவனியாமல், கையிலிருந்த கோலை எடுத்து வீசினான். அது மழுவாகி எச்சதத்தனின் காலைத் துண்டித்தது. பிரத்யட்சமான இறைவனும் - இறைவியும் இனி நாமே உனக்கு தாய் - தந்தையர்கள் எனக் கூறி ஆசிர்வதித்தனர். வேண்டும் வரங்களைக் கேள் என அம்மையப்பன் கேட்க, எனக்கு தினமும் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டிருப்பதே போதும் வேறொன்றும் வேண்டாம் எனக் கூறிய சிறுவனுக்கு சண்டேசர் எனப் பெயரிட்டு, அபிஷேக கோமுகத்தருகே சந்நிதி கொள்ள வைத்தார் இறைவன், என ஸ்தல வரலாறு. சண்டேசரை தரிசித்த பின்னரே சிவதரிசன முழுப்பலன் கிடைக்கும். வைணவப் பெரியார் பெரிய வாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம். தேவாரத்திருத்தலம்.
மூலவர்: சத்தியகிரீசுரர், அம்பாள்: சகி தேவி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சத்தியகிரீசுரர். அழகிய தேஜோமய லிங்கம். சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் சகிதேவியம்மை. பிரகார வலச்சுற்றில் கணபதி, ஷண்முகர், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், கஜலட்சுமி, நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். வெண்கல ஓசை தரும் பைரவர் திருமேனியும் காணலாம். இங்குள்ள சண்டேசர் - சடை, பிறை, கங்கை, குண்டலம் ஆகிய சிவ சின்னங்களுடன் காணப்படுகிறார். மகாமண்டபத் தூண்களில் விஷ ஜந்துக்களின் உருவங்கள் காணப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களில் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.