அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (மேலக்காட்டூர்)
God Name : அகத்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலவர்: அகத்தீஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அகத்தீஸ்வரர். அகஸ்தியர் பூஜித்து வழிபட்டதால், இறைவன் அகத்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதி கொண்டுள்ளார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். அர்ச்சனை செய்யும் போது அம்பாளின் திருமேனியில் உலோகம் ஏதாவது பட்டால், சப்தஸ்வர இசை வெளிப்படுகிறது. இதனால் அன்னையை ஓசையம்மன் என்றும் அழைக்கின்றனர்.
தேவ கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடியை, ரிஷபம் தனது நாவால் வருவது போன்ற அமைப்பு புதுமையாக இருக்கின்றது.
வலச்சுற்றில் பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
கார்த்திகை சோம வாரங்களில் 1008 தீபங்கள் ஏற்றுகின்றனர். இத்தலத்தில் குழந்தைகளை தத்து எடுக்கும் வைபவம் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.