அருள்மிகு கம்பகரேசுவரர் சுவாமி திருக்கோயில் (திருபுவனம்)

God Name : மூலவர்: ஸ்ரீ கம்பகரேசுவரர்் சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ சரபேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோவில் (1178-1216). தனது வடநாட்டுப் போரின் வெற்றிக்கு அடையாளமாக, தாராசுரத்துக் கோவிலைப் போலவே கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவர்களிடம் போரில் தோற்ற திரிபுராதிகள் எனப்படும் மூன்று அசுரர்கள், சிவபெருமானைக் குறித்து தவமிருந்து பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களாலான, வானத்தில் பறக்கும் கோட்டைகளை வேண்டிப் பெற்றார்கள். இதனால் இவ்வூருக்கு 'திரிபுவனம்' எனப் பெயர் வந்தது. வரகுணப் பாண்டியனைப் பிடிக்கக் காத்திருக்கும் பிரம்மஹத்தியினால், அவன் கொண்ட பயத்தையும், நடுக்கத்தையும் தீர்த்து வைத்த இறைவன் இங்கு மூலவராக இருப்பதால், இவருக்கு 'கம்பகரேசுவரர்' எனப்படும் 'நடுக்கம் தீர்த்த நாயகர்' என்ற பெயர் வந்தது. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மர் ஆவேசம் அடங்காமல் உக்ர வெறியோடு இருந்தார். இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானது உதவியை நாடினார்கள். நரசிம்மமே நடுங்கும்படியான உக்கிர சரபேஸ்வர வடிவம் கொண்டு, நரசிங்கத்தின் ருத்ர சக்தியை ஆகர்ஷித்துக் கொண்டார் எனப் புராண வரலாறு கூறுகிறது. தேவர்களின் நடுக்கத்தைத் தீர்த்து வைத்ததால் 'நடுக்கம் தீர்த்த நாயகர்' எனப் பெயர். தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஸ்ரீகம்பகரேசுவரர், சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ சரபேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ தர்மசம்வர்த்தினி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கம்பகரேசுவரர். கம்பீரமாக காட்சி தரும் மிகப் பெரிய திருமேனி. 'நடுக்கம் தீர்த்த நாயகர்' என்றும் அழைப்பர். வரகுண பாண்டியன் கொண்ட நடுக்கத்தைத் தீர்த்து வைத்ததால் அப் பெயர் கொண்டார். (கம்பம் என்றால் நடுக்கம்). தனி சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். 'அறம் வளர்த்த நாயகி' என்ற திருநாமமும் உண்டு. வடக்குபுறமாக உள்ள கருவறையில் ஸ்ரீ சரபேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சிம்மம், ஈஸ்வர அம்சம், சரப பட்சி ஆகிய மூன்றும் சேர்ந்த அவதாரம் ஸ்ரீ சரபேஸ்வரர். 'சிம்மக்ன மூர்த்தி' என்பார்கள். சூரியன், சந்திரன், அக்னி ஆகியவர்களை மூன்று கண்களாகக் கொண்டும், பாதி மனித உடல், பாதி சிம்ம உடல் கொண்டும், யாளி முகத்துடனும், ப்ரத்யங்கிரா தேவி - சூலினி தேவி இருவரையும் இறக்கைகளாகக் கொண்டும், காலனை தொடைகளாகக் கொண்டும், எட்டு திக்குகளை எட்டு கால்களாகக் கொண்டும், இந்திரனை நகங்களாகக் கொண்டும், மான், மழு, சர்ப்பம், நெருப்பு ஆகியன கொண்ட சதுர்புஜங்களுடனும் சத்ரு சம்ஹார மூர்த்தியாக தரிசனம் தருகின்றார். சரபத்தின் பின்பாகம் லிங்க வடிவில் உள்ளது. குதிரைகள் இழுத்துச் செல்லும் வண்ணம் ரதம் போன்று அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின், முத்கலச விமானத்தின் கீழ் சோமாஸ்கந்தர் எழுந்தருளியுள்ளார். அடி பாகத்தில் ராமாயண நிகழ்வுகள், மநு நீதி சோழன் கதை ஆகியன வடிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் உயரே நுட்பமான வேலைப்பாடுகளையுடைய தாமரை மொட்டுக்கள், நந்திக்கு எதிரேயுள்ள பஞ்சாரக் கால்கள், யாளிகள் தாங்கியுள்ள தூண்கள் ஆகிய எழில் மிகு சிற்பங்கள் காணலாம். ஒரே முகமுள்ள ரிஷபமும் - யானையும் சிற்பம் அற்புதமானது. யானையின் பாகத்தை மறைத்துக் கொண்டு பார்த்தால் யானையின் மத்தகம் ரிஷபத்தின் வாயாகவும், அதன் தந்தம் ரிஷபத்தின் கொம்பாகவும், யானையின் துதிக்கை ரிஷபத்தின் திமிலாகவும் தெரியும். சண்டிகேசுவரரின் சந்நிதி முகப்பின் மேல் - சிவபெருமான் சண்டேசுவரருக்கு கொன்றை மாலை சூட்டி சண்டேசுவரர் பதவி வழங்குவதை சுதை சிற்பமாக சித்தரித்துள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.