அருள்மிகு மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில் (திருவிடைமருதூர்)

God Name : மூலவர்: மஹாலிங்கஸ்வாமி எனப்படும் இடைமருதீசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மருத மரத்தை அர்ஜுனம் என்பர். மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டுள்ளதால் அர்ஜுனம் என்ற பெயர் பெற்றது. கர்னூல் ஜில்லாவிலுள்ள ஸ்ரீசைலம் எனும் தலத்திற்கும், அம்பாசமுத்ரம் அருகேயுள்ள ஸ்புடார்ஜுனம் எனப்படும் திருப்புடைமருதூருக்கும் இடையே இருப்பதால் மத்யார்ஜுனம் எனப்படுகிறது. அதாவது இடைமருதூர். மருத மரங்கள் நிறைந்த சோலைகளின் நடுவே, உரோமச முனிவர்க்கு இறைவன் ஜோதிர் லிங்கமாக காட்சி தந்ததால் இடைமருதூர் எனப் பெயர் கொண்டது. தமது ஹிருதயகமலத்தில் இறைவனை இருத்தி, உமா தேவி தியானித்ததை அனைவர்க்கும் விளக்கி, சிவபெருமான் வீற்றிருக்கும் ஸ்தலம். உலக உயிர்கள் யாவும் ஒடுங்கிய மஹாராத்ரியில் ஏகாதசருத்ரர் வந்து வழிபட்டு சிவப்பேறு பெற்ற ஸ்தலம். காசிக்கு சமமான ஆறு ஸ்தலங்களுள் ஒன்று. கிழக்கே விஸ்வநாதரும், மேற்கே ரிஷிபுரீஸ்வரரும், வடக்கே சொக்கநாதரும், தெற்கே ஆத்மநாதரும் எழுந்தருளியிருக்க, மஹாலிங்கர் நடுவே எழுந்தருளியிருப்பதால் பஞ்சலிங்க ஸ்தலம் என அழைக்கின்றனர். அரசன் ஒருவன், குதிரையில் வந்து கொண்டிருந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த பிராமணனை குதிரை இடறி மிதித்து விட்டது. பிராமணன் இறந்து விட்டான். இதை கவனியாது சென்ற அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தது. இவ்விறைவனை வழிபட வேண்டி, அரசன் கிழக்கு கோபுர வாசல் வழியே உள்ளே சென்றான். பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தியால் கோவிலுக்குள் வர முடியவில்லை. அவன் திரும்பி வருவான் என அங்கேயே காத்திருந்தது. பிரம்மஹத்தி தொடர்வதால் பயந்த அரசன், இறைவனை வணங்கி முடித்ததும் மேல வாசல் வழியே வெளியே சென்று விட்டான். இன்னமும், பிரம்மஹத்தி கீழ வாசலிலேயே காத்திருக்கின்றது. தேவாரத்திருத்தலம்.
மூலவர்: மஹாலிங்கஸ்வாமி எனப்படும் இடைமருதீசர். அம்பாள்: ப்ருஹத் சுந்தர குஜாம்பாள் எனப்படும் பெருநல மாமுலையம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான மஹாலிங்கஸ்வாமி. தேஜோ மயமாக ஒளி வீசும் அழகிய திருமேனி. இவருக்கு மருதவாணர், இடைமருதீசர் ஆகிய திருநாமங்களும் உண்டு. மூலஸ்தானத்திற்குப் பக்கத்தில் ஆக்ஞா கணபதி வீற்றிருக்கின்றார். இவரை ஆண்ட விநாயகர் என்றும் அழைப்பர். இவரே ஸ்தல விநாயகர். பௌத்தர்கள் ஆதிக்கத்தின்போது மஹாலிங்கேஸ்வரருக்கு பூஜை இல்லாமலிருந்தது. சிவபெருமானின் ஆக்ஞையை மேற்கொண்டு இவரே லிங்கத்திற்கு பூஜை செய்தார். இதனால் ஆக்ஞா கணபதி என்ற பெயரைக் கொண்டார். தனி சந்நிதி கொண்டுள்ள அம்பாள் ப்ருஹத் சுந்தர குஜாம்பாள் மிகுந்த வரபிரசாதி. தமிழில் பெருநல மாமுலையம்மை என்பர். சக்தி பீடங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது. அம்பாள் சந்நிதி அருகே மூகாம்பிகை எழுந்தருளியுள்ளார். அவளருகே ஸ்ரீ சக்கர மஹா மேரு அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நந்தி - சுதையாலானது. இது வளர்ந்து கொண்டே இருப்பதால் தலையில் ஆணி அடித்து வளர்ச்சியை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. மூன்று மிக முக்கிய பிரகாரங்கள். அஸ்வமேத பிரகாரம் எனப்படும் வெளிப் பிரகாரம். இதில் வலம் வருபவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கொடுமுடி பிரகாரம் - மத்தியிலுள்ளது. இதை பிரதட்சிணம் செய்தால் கயிலாயத்தை வலம் வந்த பலன் கிட்டும். ப்ரணவ பிரகாரம் எனப்படும் உட்பிரகாரம் - இதை பிரதட்சிணம் செய்பவர்களுக்கு மோட்சம் கிட்டும். முகமண்டபத்து வடக்கு சுவரையொட்டி சாம்பவி தட்சிணாமூர்த்தி சுதை சிற்பமாக தரிசனம் தருகின்றார். சித்திர பிரகாரத்தில் உத்குடிகாசனத்தில் அமர்ந்த சக்தி தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிகவும் அழகானது. கோவில் மிகப் பெரியது என்பதால் எண்ணற்ற சந்நிதிகளையும், அனேக மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். 27 நட்சத்திரங்களுக்குரிய 27 லிங்கங்களையும், 28வதாக அபிஜித் நட்சத்திரத்திற்குரிய லிங்கத்தையும் தரிசிக்கலாம். கிழக்கு கோபுர வாசலில் படித்துறை விநாயகர் மற்றும் பட்டினத்தார் திருவுருவங்களைக் காணலாம். மேற்கு கோபுர வாசலில் பத்திரகிரியாரைக் காணலாம். இரண்டாவது வாசலின் தென்புற மாடத்தில் பிரம்மஹத்தி காத்திருக்கின்றது. (தெற்கு தோரண வாயில்)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.