அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மஸ்வாமி திருக்கோயில் (பழைய சீவரம்)

God Name : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

திருவாரூர்

Call : +91-

பழைய சீவர்மலை எனப்படும் பத்மகிரிக்கு ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து கச்சியிலிருக்கும் தேவாதிராஜனுக்கு கிரடாசலமாக கருடனால் கொண்டு வரப்பட்டது. அத்ரி மகரிஷிக்கு நித்ய கல்யாண கோலத்தில் லட்ச்மியோடு நரசிம்மர் காட்சியளித்ததாக ஐதீகம். முன்பு வரதர இருந்த மண்டபம் மலை மேலுள்ளது. இங்கிருந்த வரதரை காஞ்சி வரதராஜர் கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
மூலவர்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தாயார்: ஸ்ரீ அஹோபிலவல்லி மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மேற்கே திருமுகமண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில், ஆஜானுபாகு திருமேனியாக சேவை சாதிக்கின்றார். தனது இடது தொடையில் மஹாலட்ச்மியை இருத்தி, தரிசனம் தருகின்றார். அத்ரி மகரிஷிக்கும் அனுசுயாவிற்கும் பிரத்யட்சமானதாக ஐதீகம். ஸ்ரீ அஹோபலவல்லித் தாயார் தனிக்கோவில் நாச்சியாராக மஹாமண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். பறக்க எத்தனிக்கும் நிலையில் கருடாழ்வாரின் அபுரவ கோலமும் உற்சவ மூர்த்தங்களும் அழகாக உள்ளன. ஸ்ரீ நிகமாந்த தேசிகர், ஆண்டாள், வாகன மண்டபத்தில் ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கண்ணாடி அறையில் ஸ்வாமியைப் பார்ப்பும்போது, நாற்புறமும் முழுக்கோவிலையும் காணமுடிகின்றது. 140 படிகள் மேலேறி வரதராஜ மண்டபம் போக வேண்டும். பொங்கல் தினம் இரவு 10 மணிக்கு பார வேட்டை கிளம்பும் கச்சி வரதராஜ (காஞ்சி) பழைய சீவரம் வந்து வன போஜனம் விழா முடித்து, 250 படிகள் ஏறி (பத்ம கிரி குன்று) வந்த சேவை சாதிக்கின்றார். மறு நாள் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியை அடைகிறார். மலை உற்சவம், தோட்ட உற்சவம், நடவாவி உற்சவம் ஆகியன சிறப்புற நடத்தப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.