அருள்மிகு மகிஷாசூரமர்த்தினி திருக்கோவில்

God Name : -

Call : +91-

அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கத்தில் ரயில் பாதை அமைக்கும் பணியில் மத்தூரில் பூமியைத் தோண்டி அகழும்போது, மூர்ச்சித்து விழுவது வழக்கமாக நடக்கும் நிகழ்ச்சி. இங்கு ஏதோ அமானுஷ்யமான சக்தி இருக்கிறதென்று பயந்து இந்த இடத்தை சக்திமேடு என்றழைத்தனர். இவ்விஷயங்களை, காஞ்சி மஹா பெரியவா பரமாச்சார்யாரிடம் கூறினார்கள். அவரது யோசனையின்படி, இங்கு மகிஷாசூரமர்த்தினியை பிரதிஷ்டை செய்து கோவிலெழுப்பினார்கள். கோவிலுக்கு போகும் வழி நெடுகிலும் பசுமையான சோலைகள் நிறைந்துள்ளன. இங்குள்ள வேப்ப மரத்து இலையை, அன்னையை பிரார்த்தித்து உண்டால் கசப்பதில்லை. நமது குறைகளை எடுத்துக் கொள்வது போல் வேப்பிலையின் கசப்பையும் எடுத்துக் கொள்வதாக கூறுகின்றார் பூசாரி.
கோவிலுள் இடது பக்கமாக உள்ள சந்நிதியில் விநாயகரையும், அடுத்துள்ள சந்நிதியில் துர்க்கை அம்மனையும் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மகிஷாசூரமர்த்தினி ஏழடி உயரமுள்ள நெடிதுயர்ந்த திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றாள். அஷ்ட புஜங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், திரிசூலம் ஆகியன ஏந்தியும், கபால மாலை தரித்தும், மகிஷாசூரனின் தலையில் ஆனந்த நடனம் புரியும் கோலத்திலும் தரிசனம் தருகின்றாள். மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.