அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் திருக்கோவில் (திருலோக்கி)

God Name : க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

மார்க்கண்டேய மகரிஷியின் மூலமாக இத்தலத்தின் பெருமைகளை கேள்வியுற்ற திருமகள், திருமாலை விட்டு என்றும் பிரியாதிருக்கும் வரத்தைப் பெற, இத்தலத்திலுள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். தவத்தில் மகிழ்ந்து பிரத்யக்ஷமான திருமால், லட்சுமி கோரிய வரத்தை அருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. திருமகளிடமிருந்து வெளிப்பட்ட இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிய மூன்று சுவாச நாளங்களின் சக்தியால் திரிதள வில்வம் தோன்றியதாக ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. பிதுர்கடன்களை ஒழுங்காக செய்யாதவர்கள், லட்சுமி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்தால், பித்ரு தோஷங்கள் நீங்கி, சந்ததி விருத்திக்கு ஆசி கிடைக்கும். மாங்கல்ய தோஷம் நீங்கும், மகப்பேறு உண்டாகும்.
மூலவர்: க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள், தாயார்: க்ஷீர நாயகி. மூலஸ்தானத்தில் மூலவராக க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு, சயனக் கோலத்தில் தென்புறமாக சிரசை வைத்து, கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, சேவை சாதிக்கின்றார். திருமுகமருகே ஸ்ரீ தேவியும், திருவடிகளருகே பூதேவியும் அமர்ந்திருக்க, நாபிக் கமலத்தில் பிரம்மா காணப்படுகிறார். தனிக்கோவில் தாயாராக க்ஷீர நாயகி எழுந்தருளியுள்ளார். யோக நரசிம்மர், விஷ்வக்சேனர், பெரிய திருவடி, சிறிய திருவடி, வரதராஜர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். நின்ற கோலத்திலுள்ள கருடாழ்வாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.