ஸ்தல வரலாறு
இந்து என அழைக்கப்படும் சந்திரன் வழிபட்டு சுகங்கள் பல அடைந்ததால் இந்தளூர் எனப் பெயர் கொண்டது.
தட்சணின் புதல்விகளான இருபத்தி ஏழு நட்சத்திரப் பெண்களை மணக்க சிவபெருமானின் அருள் பெற்ற ஸ்தலம். அகஸ்தியருக்கு திருமணக்கோலத்தை காட்டியது போல், சந்திரனின் விருப்பத்திற்கிணங்க இறைவன் மணக்கோலம் காட்டியருளிய ஸ்தலம். இதனால் மணம்புர ஸ்வரஸ்வாமி எனப் பெயர் கொண்டார் என ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார்; மணம்புரஸ்வர ஸ்வாமி. இவருக்கு கல்யாணபுரஸ்வரர்; என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் கயலுவந்த கண்ணி எனப் போற்றப்படும் கயிலாந்த கண்ணி அழகே உருவாக எழுந்தருளியுள்ளார்;. சந்திரன் வழிபட்ட சங்கடஹரகணபதி, கல்யாண சுப்ரமண்யர்;, செல்லியம்மன் ஆகியோரும் சந்நிதி கொண்டுள்ளனர்;. எழிலார்ந்த உற்சவ மூர்த்திகளும் இடம் பெற்றுள்ளனர்;.

Opening Time
05.30 AM

Closing Time
07.00 PM

Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.