அருள்மிகு அன்னை ஆதி பராசக்தி திருக்கோவில் (மேல் மருவத்தூர்)

God Name :

திருவாரூர்

Call : +91-

தற்போது பிரதான கருவறை உள்ள இடத்தில், ஆதியில் ஒரு வேப்ப மரமும் அதனடியில் பெரிய புற்றும் இருந்தது. 1966ம் வருஷம், புயல் காற்று விசியதில் வேப்ப மரம் சாய்ந்து, அதன் கீழ் சுயம்புவாக அன்னைகுடி கொண்டுள்ளதை மக்கள் கண்டனர். அன்னையை சுற்றிலும் மூடிக் கொண்டிருந்த புற்றும் மழை நீரில் கரைந்தது. ஒரு நாள் இந்த வேப்ப மரத்திலிருந்து பால் வடிய ஆரம்பித்தது. அந்த பால் சுவை மிக்கதாக இருந்தது. இந்த அதிசயத்தை காண வந்த மக்கள் இப்பாலைக் குடித்துப் பயனுற்றனர்; என ஸ்தல வரலாறு. கல்லூரிகள், மருத்துவ மனை ஆகியன ஆதி பராசக்தி சித்தர் பீடம் சார்பில் நடத்துகின்றனர். சக்தி ஸ்தலங்களுள் ஒன்று
ஆலயத்துள் நுழைந்ததும் முதலில் ஓம் சக்தி மேடையை சுற்றி வலம் வந்து வணங்க வேண்டும். இதில் நடப்பட்டுள்ள சூலத்தை வழிபட வேண்டும். இதன் பின்புறமாக மண்டபங்கள் உள்ளன. அதர்வண பத்ரகாளி சந்நிதி கொண்டுள்ளாள். மண்டபங்களை அடுத்து பிரதான கருவறை இருக்கின்றது. பிரதான கருவறையில் அன்னை ஆதி பராசக்தி தாமரை பீடத்தில் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பீடத்திலுள்ள தாமரை மலரின் புற இதழ்கள் கீழ் நோக்கி உள்ளன. தனது இடது காலை அதன் மீது ஊன்றியுள்ளாள். வலது காலை மடித்து வைத்துள்ளாள். சுயம்புவாக வெளிப்பட்டவள் என்பதால் வித்யாசமான தோற்றம். இடது கரம் சின்முத்திரை தாங்கியும் வலக்கரத்தில் மலரை வைத்துக் கொண்டும் காட்சி தருகின்றாள். கன்னி கோவில் என்றழைக்கப்படும் சப்த கன்னியரின் சந்நிதி புற்று மண்டபத்தின் வலப்புறமாக அமைந்துள்ளது. அதில் ப்ராஹ்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வாராஹி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரின் கோவில் கொண்டுள்ளன. 21 சித்தர்களின் ஜீவ சமாதியும் உள்ளது. சித்தர்களின் கூட்டமே இங்கு உறைவதால் இத்தலத்தை சித்தர் பீடம் என்றும் சித்தர் கோவில் என்றும் கூறுவர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.