அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (மானந்தகுடி)
God Name : ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
ஸ்ரீ ராமர், தில தர்ப்பணம் செய்வதற்காக தர்ப்பை கொண்டு வரும்படி ஹனுமனிடம் பணித்தார். ஹனுமன், தர்ப்பை ஆண்டார்பந்தி எனும் ஊருக்கு சென்றார். போகும் வழியில் இவ்வூருக்கு வந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கார்த்தவீரியன் சிவபெருமானை வேண்டி வேள்வி செய்து கொண்டிருந்தபோது, யாகமண்டபத்தில் புகுந்து விளையாடிய ஹனுமனை, பலமிழக்குமாறு சபிக்கிறான் கார்த்தவீரியன்.
இத்தலத்தில் தங்கி ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார் ஹனுமன். இதனால் ஆனந்தமடைந்து ஹனுமன் கூத்தாடியதால், ஹனுமன் - ஆனந்தம் - குடி (ஹனுமானந்தகுடி) எனப் பெயருற்று, பின்னர் மருவி மானந்தகுடி என்றானதாக கூறுவர்.
சஞ்சீவி மலை தூக்கி வரும் பாவனையில் சிலாவடிவமாக மங்கள ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
இது ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் திலதர்ப்பணம் செய்த இடம். இவ்விடத்தை திலத்திட்டு என்றும் கோழிகுத்தி என்றும் அழைப்பார்கள். மேலும், இவ்விறைவனை கிருஷ்ணர் தரிசித்ததால் கிருஷ்ணாபுரம் எனப் பெயர் கொண்டது.
மூலவர்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்் அம்பாள்: ஸ்ரீ காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். காசியைப் போன்றே லிங்கமாக எழுந்தருளியுள்ளார். தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அன்னை காமாட்சி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக உள்ளன.
பிரகார வலச்சுற்றில் விநாயகர், சுப்ரமண்யர், மணிகர்ணிகேஸ்வரர், மஹாலிங்கஸ்வாமி, மஹாலட்சுமி ஆகியோரை தரிசிக்கலாம்.
வடக்கு பிரகாரத்தில் கிழக்கு பார்த்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.
உஷா - ப்ரத்யுஷா உடனாய சூரியன், ரோஹிணியுடன் சந்திரன், சக்தியுடன் அங்காரகன், ஞானசக்தியோடு புதன், தாரா தேவியோடு குரு, சுகீர்த்தியோடு சுக்கிரன், நீலா தேவியோடு சனீஸ்வரர், சிம்ஹி தேவியோடு ராஹு மற்றும் சித்ரலேகாவுடன் கேது என எல்லா கிரகங்களும் தேவியர்களோடு காட்சி தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.