அருள்மிகு செட்டியப்பர் திருக்கோவில் (அய்யன்பேட்டை)
God Name : செட்டியப்பர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
பஞ்சம் வந்த காலத்தில், உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு தினமும் இரண்டு வேளை உணவு படைத்தனர். அதற்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக வீழிநாதரிடமிருந்து தினமும் பொற்காசுகளைப் பெற்றனர். படிக்காசாகப் பெற்ற பொற்காசுகளை எங்கே மாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்த அப்பர் - சம்பந்தர் இருவரையும், கீழ்திசை நோக்கிச் செல்லுமாறு இறைவனே வழிகாட்டினார். கீழ்திசையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் வியாபாரம் செய்யும் செட்டியாராக இறைவனே தோன்றினார். அய்யனே வணிகனாக வந்த இடம் என்பதால் இவ்வூர் அய்யன்பேட்டை என்று பெயர் கொண்டது. பொற்காசுகளைப் பெற்றுக்கொண்டு, செட்டியார் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களைத் தந்தார். அப்பரின் காசுகள் 'வாசி' இல்லாதவை (அதாவது, கமிஷன் இல்லாதவை) - இதனால் பண்டங்கள் உடனே கிடைத்து, மடத்தில் உணவு உடனடியாகத் தயாரானது, மேலும் அதிகப்படியான நபர்களுக்கு உணவளிக்கப் போதுமான அளவு கிடைத்தது. சம்பந்தரின் காசுகள் 'வாசி' உள்ளவை (அதாவது, கமிஷன் கொண்டது) - இதனால் பண்டங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது, அதன் காரணமாக உணவு தயாராவதிலும் தாமதம் ஏற்பட்டது. இது போன்ற ஒரு திருவிளையாடலையும் வீழிநாதர் நிகழ்த்தியுள்ளார்.
மூலவர்: செட்டியப்பர், அம்பாள்: படியளந்த நாயகி. மூலஸ்தானத்தில், செட்டியப்பர் எனப்படும் சுந்தரேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். படியளந்த நாயகி என அழைக்கப்படும் மீனாட்சியம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சுவாமியின் உற்சவ மூர்த்தி கையில் தராசு பிடித்தபடியும், உற்சவ அம்பாள் படியை கையில் ஏந்தியும் காட்சியளிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.