அருள்மிகு வீழிநாதசுவாமி திருக்கோவில் (திருவீழிமிழலை)

God Name : மூலவர்: வீழிநாதேஸ்வரர் எனப்படும் நேத்திர அர்ப்பணேஸ்வரர்் உற்சவர்: மாப்பிள்ளைசாமி.

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

ஜலந்திரனை வதைத்த சக்கரத்தை,  ்சிவபெருமானிடமிருந்து பெற வேண்டி, திருமால் 16 சிங்கங்கள் தாங்குகின்ற ்

விண்ணிழி விமானம் கொண்டு வந்து அதில் சிவபெருமானை எழுந்தருள வேண்டினார். இங்கு தடாகம்  ்ஒன்றினை ்

ஏற்படுத்தினார். அதில் செந்தாமரை மலர்களை தோற்றுவித்தார்..

தினந்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார். ஒரு நாள் பு+ஜையின்போது, ஆயிரம் ்

மலர்களில் ஒன்று குறைந்து 999 மலர்களே இருந்தன. உடனே தனது வலக் கண்ணைப் பறித்து அதையே மலராக ்

கருதி பு+ஜையை முடித்தார். பிரத்யட்சமான சிவபெருமான் அவர் கோரிய சக்கரத்தை தந்தருளினார் என ஸ்தல ்

வரலாறு.

காத்யாயன முனிவரும் அவரது மனைவி சுமங்கலையும் இத்தலத்தில் தவச்சாலை ஒன்றினை அமைத்து ்

ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு நித்ய பு+ஜைகள் செய்து வந்தனர். நெடுங்காலமாக புத்திரப்பேறு ்

வாய்க்காததால் வேள்வி ஒன்றை மேற்கொண்டனர். யாகத்தீயில் அன்னப்பு+ரணியாகத் தோன்றிய ்

அம்பிகையிடம் புத்ர பாக்ய வரம் கேட்டனர்.

அம்பிகையே மகளாகப் பிறந்து - வளர்ந்து, சிவபெருமானை மணம் முடிக்க வேண்டும் என்ற வரத்தை ்

கேட்டுப் பெற்றனர். ஒரு நாள் குளத்தில் நீலோற்பல மலரில் அழகிய பெண் குழந்தை ஒன்று இருப்பதை ்

ரிஷிபத்தினி கண்டாள். உமையவளின் வடிவமே அந்த குழந்தை என அறிந்து கொண்டு, மகிழ்ந்தாள். ்

காத்யாயினி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

அந்த பெண் குழந்தை வளர்ந்து பெரியவளானதும், அவளை திருமணம் செய்து கொள்ளுமாறு, சிவனை ்

வேண்டினர். சித்திரை மக நாளில் மணப்பதாக கூறுகிறார் சிவபெருமான். மாப்பிள்ளைசாமியாக வந்து

நின்றவர் சிவபெருமான்தானா என்ற சந்தேகம் முனிவருக்கு வந்தது. ்

திருமால் தன்னை பு+ஜித்த கண்மலரையும், மிழலைக் குறும்பர் நைவைத்யம் செய்த விளாம்பழத்தையும் ்

தனது திருவடிகளருகே காண்பித்தார் மாப்பிள்ளைசாமி. முனிவரின் சந்தேகம் தீர்ந்தது. திருமணமும் ்

இனிதே நடந்தேறியது. மாப்பிள்ளை அழைப்பு, காசி யாத்தரை என கல்யாணத்தில்் நடக்கும் அனைத்து

நிகழ்வுகளும் நடந்தேறின.

நாட்டில் கொடிய பஞ்சம் தலை விரித்தாடியபோது, பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, வருந்திய ்

அப்பரும் ,சம்பந்தரும் இவ்விறைவனைப் பாடி பொற்காசுகள் பெற்று, அதில் பொருட்களை வாங்்கி ்

சமைத்து, அனைவர்க்கும் சோறிட்டார்கள். சமயக்குரவர்களான அப்பரும் சம்பந்தரும் இங்கே மடங்கள்

அமைத்துள்ளனர்.

இறைவனின் கட்டளைப்படி, இவர்கள் இருவருக்கும் தினந்தோறும் படிக்காசு தந்த விநாயகர் மேற்கு ்

பீடத்தருகே அமர்ந்துள்ளார். ஆதலால் இவருக்கு படிக்காசு விநாயகர் என்று பெயர் வந்தது.

தேஜினிவனம் என்றால் வீழிச்செடிக்காடு எனப் பொருள். வீழிச்செடிகள் நிறைந்திருந்த பகுதியாக  ்

இருந்ததால் இவ்வு+ர் திருவீழிமழலை எனப் பெயர் கொண்டது. ஸ்தல விருட்சம் வீழி மரமாக இருப்பினும் ்

தற்போது இருப்பது பலாமரமே.

மிழலைக்குறும்பர் எனும் வேடுவர் தினமும் இறைவனுக்கு விளாம்பழ நைவைத்யம் செய்வார். அவரது ்

அன்பான வழிபாட்டை மெச்சி இறைவன் மிழலைக்குறும்பருக்கு அஷ்டமா சித்திகளை அருளினார் ்

எனக் கூறப்படுகிறது.

ஓவ்வொரு வருஷமும் சித்திரை மாசத்தில் கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது. பெருவிழாவின் 2ம் நாள் ்

திருமுலைப்பால் உத்ஸவம் நடைபெறம். சம்பந்தரின் உலாத்த்ிருமேனி எழுந்தருளல் நடைபெறும்.

திருவீழிமழலையில் முட்டையாறு எனப்படும் க்ஷீரநதி - அரிசொலாறு எனப்படும் அரசலாறு சங்கமம் காண ்

தியாகராஜ பிள்ளையார் கோவிலை அடுத்து போகும் பாதையில் கிழக்கே போக வேண்டும். தை அமாவாசை ்

தொடங்கி சிவராத்ரி அமாவாசை வரை விடியற்காலை ஸ்நானம் செய்வார்கள். விஷ்ணுபுரத்திலிருந்து ்

ஆண்களும் பெண்களும் வருவார்கள்.

தேவாரத்திருத்தலம்

மூலவர்: வீழி நாதேஸ்வரர் எனப்படும் நேத்திர அர்ப்பணேஸ்வரர், உத்ஸவர்: மாப்பிள்ளைசாமி, அம்பாள்: சுந்தராம்பிகை

கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வீழி நாதேஸ்வரர். உயரமான திருமேனி. ்

வடமொழியில் நேர்த்திரார்ப்பணேஸ்வரர் (அ) நேத்திர அர்ப்பணேஸ்வரர் என்றும் தேஜினிவனநாதர் என்றும் ்

வீழியழகேசர் என்றும் அழைக்கின்றனர். மூலவருக்குப் பின்னால் பார்வதி - பரமேச்வரன் திருவுருவங்கள் ்

அழகாகவும் பெரியதாகவும் சுதைச்சிற்பங்களாக உள்ளன. கிழக்கு பார்த்த சந்நிதி.

கருவறைக்கு எதிரில் அரசாணிக்கால் எனப்படும் ஆறடி உயரம் கொண்ட, வெள்ளிக் கவசம் போர்த்திய தூண் ்

ஒன்றைக் காணலாம். அரசு - அரசமரம், ஆணி - மூங்கில் மரம்: அரசும் மூங்கிலும் சேர்ந்தது அரசாணி என்பர். ்

இதற்கு மேலே அஸ்வினித் தேவர்கள் இருப்பர். மணமக்களுக்கு காப்பு கட்டும் போது இதற்கும் காப்பு பட்டப்படும்.

மாப்பிள்ளைசாமி எனப்படும் அழகிய மணவாளனை மஹாமண்டபத்தில், கல்யாணக் கோலத்தில், தெற்கு பார்த்த ்

பீடத்தில், சிலா வடிவத்தில் காணலாம். கல்யாணசுந்தரர் என்றும் அழைப்பார்கள். இதனை கல்யாண சபை என்று ்

அழைப்பார்கள். இப்படி சபாமூர்த்தியாக கல்யாணசுந்தரர் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டும்தான். இவரது ்

திருவடியில் திருமால் அர்ப்பணித்த தாமரைக்கண் பொறிக்கப்பட்டிருப்தைக் காணலாம். அதன் கீழ் சக்கரமும் ்

பின்புறமாக விளாம்பழமும் இருப்பதைக் காணலாம்.

ராஜ கம்பீரத்திற்கும், விவசாயத்திற்கும் உரிய செண்டை வலக்கரத்தில் ஏந்தியுள்ளார் மாப்பிள்ளைசாமி. தனது ்

இடக்கரத்தை ரிஷபத்தின் மீது ஊன்றியுள்ளார். வலப்புறம் மணப்பெண்ணாக காத்யாயினி நாணிக் - கோணி ்

நிற்கின்றாள். காத்யாயன மகரிஷி, அவரது மனைவி சுமங்கலை மற்றும் மிழலைக் குறும்பர் ஆகியோரின் ்

உருவங்கள் காணப்படுகின்றன. தென்பக்கத்தில் சக்கர பிரதான மூர்த்தி, கால சம்ஹாரர், பிட்சாடனர் ்

ஆகியோரின் வடிவங்களைக் காணலாம்.

சிவ - பார்வதியின் ஐந்து வகை திருமணக் கோலங்களில் இதனை பாலிகா விசர்ச்சனத் திருமணக் கோலம் ்

என்று அழைக்கின்றனர். மூல மூர்த்தியாகவும், உத்ஸவ மூர்த்தியாகவும் திருமணக் கோலத்தில் தரிசனம் தரும்,

ஒரே ஸ்தலம் திருவீழிமழலை.

முன்னை விநாயகர் சந்நிதி அருகே கோவில் கொண்டுள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாக ்

இருக்கின்றது. முயலகன் இல்லை.

மேற்கு பிரகாரத்தில் அழகிய முருகன், அஷ்ட லிங்கங்கள், ஜேஷ்டா தேவி, மஹாலக்ஷ்மி ஆகியோரையும், ்

கிழக்கு பிரகாரத்தில் அருணாசலேச்வரர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரையும் தரிசிக்கலாம். தியாகராஜரின்

சந்நிதி உள்ளது.

விமானத்தின் தென்புறம் தோணியப்பர் - உமா தேவி சுதை சிற்பங்கள் ஞானசம்பந்தருக்கு காட்சி தந்த கோலம். ்

பிரகார வலத்தில் அவசியம் தரிசிக்க வேண்டியது.  ்இந்த விமானத்தை விண்ணிழி விமானம் என்பர். பதினாறு

சிங்கங்கள் தாங்கிக் கொண்டிருக்கும் விமானம்.

வடபகுதியில் தனிக் கோவில் கொண்டுள்ளார் அம்பாள் சுந்தராம்பிகை. சுந்தர குஜாம்பிகை என்றும் அழகிய ்

மாமுலையம்மை என்றும் அழைக்கின்றனர். மிகவும் அழகான திருவுருவம். வரபிரசாதி.

படிக்காசு விநாயகர் சந்நிதியும் பிரகாரத்தில் உள்ளது.

வெளவால் ஒட்டு மண்டபம் அல்லது வெளவால் நெற்றி மண்டபம் எனப்படும் நூற்றுக்கால் மண்டபம் அபு+ர்வமான ்

பொறியியல் சாதனை. மேலே வளர்ந்துள்ள விதானம், விஸ்தாரமான உள் அமைப்பு, மற்றும் கல் கொடுங்கைகள், ்

ஆகியவற்றை நேர்த்தியாக செய்துள்ளனர். தூண்கள் ஏதுமின்றி சுண்ணாம்பால் கட்டப்பட்டது. வெளவால்கள் ்

பற்றிக் கொண்டு தொங்க முடியாதபடி கட்டியுள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.