அருள்மிகு கோணேஸ்வர சுவாமி திருக்கோயில் (குடவாசல்)

God Name : மூலவர்: ஸ்ரீ கோணேஸ்வரர் எனப்படும் அம்ருதலிங்கேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

காச்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். ஒருத்திக்கு விநதை எனப் பெயர். இவளது மகன் கருடன். மற்றவள் பெயர் கத்ரு. இவளது பிள்ளைகள் கொடிய விஷப் பாம்புகள். இரண்டு மனைவிகளுமே ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போக மாட்டார்கள். ஒரு நாள் தேவேந்திரன் தனது வெள்ளைக் குதிரையான உச்சைசிரவம் மீது சவாரி செய்து போய்க் கொண்டிருந்தான். இதைக் கண்ணுற்ற விநதை, "எவ்வளவு தூய்மையான வெண்மை நிறத்துடன் உள்ளது இந்தக் குதிரை!" என குதிரையின் அழகைப் பாராட்டினாள். இவளது கருத்தை ஒப்புக் கொள்ளக் கூடாது என்று நினைத்த கத்ரு, "வால் கருப்பாக இருப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?" என்று வினவி விதண்டாவாதம் செய்தாள். "இல்லை, வெள்ளைதான்" என்றாள் விநதை. பொறாமையால் கோபம் கொண்ட கத்ரு, "அதன் வால் கருப்பு என்று நிரூபிக்கிறேன். அதன் பின் நீயும் உன் பிள்ளையும் எனக்கு அடிமை" என்று சவால் விடுத்தாள். தன்னுடைய குழந்தைகளான விஷப்பாம்புகளை அழைத்த கத்ரு, சவாலில் தான் ஜெயித்து, விநதையையும் கருடனையும் அடிமையாக்க வேண்டும் என்றாள். "வேண்டாம் இந்தப் போட்டி" என நியாயம் பேசிய தனது குழந்தைகளுக்கு சாபம் கொடுக்க முற்பட்டாள் கத்ரு. வேறு வழியின்றி கார்க்கோடகன் எனும் ஒரு குழந்தை அம்மாவின் ஆசையை நிறைவேற்றப் புறப்பட்டது. தனது விஷ மூச்சினால் குதிரையின் வாலைக் கறுப்பாக்கி விட்டான் கார்க்கோடகன். பின்னர் விநதையிடம் காண்பித்து விட்டு, சவாலில் தான் ஜெயித்ததாகக் கூறி, விநதை - கருடன் இருவரையும் அடிமைகளாக்கி விட்டாள் கத்ரு. தாயும் மகனுமாக அடிமைகளாக இருந்து பல துன்பங்களுக்கு ஆளானார்கள். பொறுமையிழந்த கருடன் தன் சிற்றன்னையிடம் போய் தனது தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கக் கோரி மன்றாடினார். "தேவலோகம் சென்று அம்ருத கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், உனது தாயையும் உன்னையும் விடுவிக்கின்றேன்" என்றாள் கத்ரு. தேவலோகம் சென்று அங்குள்ளவர்களுடன் போரிட்டு ஜெயித்து அமிர்த குடத்தை எடுத்துக் கொண்டார் கருடன். சிற்றன்னையிடம் குடத்தைக் காண்பித்து விட்டு, தாயை விடுவித்து, பின்னர் குடத்தைத் திருப்பிக் கொண்டு வந்து தருவதாகக் கூறிவிட்டு குடத்துடன் பறந்தார் கருடன். பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் அமிர்தகுடத்திலிட்டு அந்தக் குடத்தின் வாயிலில் காத்து வந்தார் சிவபெருமான். காலப்போக்கில் லிங்கத்தை புற்று மூடியது. புற்றுக்குள் லிங்க வடிவிலிருந்தார் இறைவன். குடவாசல் அருகே கருடன் பறந்து வரும்போது எதிர்ப்பட்ட மகாபயங்கரன் எனும் அசுரனுடன் போரிட நேர்ந்ததால், இத்தலத்திலுள்ள புற்று ஒன்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மேல் அமிர்தகுடத்தை வைத்து விட்டு, அசுரனுடன் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார் கருடன். பின்னர் புற்றின் மேல் வைத்த குடத்தை எடுக்கப் போனார். குடம் புற்றுக்குள் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார். தனது அலகுகளாலும், கால்களாலும் புற்றைக் கிளறி பார்த்ததில் உள்ளே குடத்துடன் கோணேச்வரரும் இருந்தார். இவ்வாறே இங்கு கோணேச்வரர் எழுந்தருளினார் என ஸ்தல வரலாறு. "உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நாடகம்" எனக் கூறிய கோணேச்வரரை வணங்கிய கருடன், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, இவ்வாலயத்தை எழுப்பி வழிபட்டார் என ஸ்தல வரலாறு. கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகமானதால் கோணேச்வரர் அம்ருதலிங்கேச்வரர் என்றானார். புற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்டதால் வன்மீகாசலம் என்ற பெயர் வந்தது. அமிர்த குடத்தைச் சிற்றன்னையிடம் கொடுத்து விட்டு, தாயை விடுதலை செய்தார் கருடன். குடத்தைத் தர்பாசனம் மீது வைத்து விட்டு நீராடச் சென்றாள் கத்ரு. அதற்குள் வாயு பகவான் குடத்தை வேகமாகத் தூக்கிச் சென்று தேவலோகத்தில் ஒப்படைத்து விட்டார். தர்ப்பையில் சிந்திய அமிர்தத் துளிகளை நக்கிய கத்ருவின் குழந்தைகளான பாம்புகளுக்கு நுனிநாக்கு இரண்டாகப் பிளந்தது என வரலாறு. பிரளய காலத்தில் உடலிழந்த உயிர்களை எல்லாம் ஒரு குடத்தில் வைத்து அம்ருதத்தால் நிறைத்து வைத்திருந்தார் சிவபெருமான். மீண்டும் படைப்பு காலம் வந்தபோது ஊழி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த குடம் மூன்றாக உடைந்தது. குடத்தின் முக பாகம் அதாவது குடத்தின் வாய் தங்கிய இடம் குடவாசல் என்றானது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ கோணேச்வரர் எனப்படும் அம்ருதலிங்கேச்வரர். அம்பாள்: பிரஹத் துர்க்காம்பாள் எனப்படும் பெரியநாயகியம்மை. கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. 18 படிகள் ஏறி மூலஸ்தானம் போக வேண்டும். அனுமதி விநாயகரை வணங்கி ஆசி பெற்று மூலஸ்தானம் செல்கின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கோணேச்வரர். சதுர பீட ஆவுடையாரும் உயரமான பாணமும் கொண்ட அழகிய பெரிய லிங்கத் திருமேனி. அம்ருதலிங்கேச்வரர், தாலப்யேஸ்வரர், பிருகுநாதர் ஆகிய பெயர்களும் உண்டு. சுயம்பு மூர்த்தம். தெய்வீக சாந்நித்யம் பரிபூரணமாக நிரம்பியுள்ள சந்நிதி. தனி சந்நிதியில் அம்பாள் பிரஹத் துர்க்காம்பாள் எனப்படும் பெரியநாயகியம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சர்வ சக்தி படைத்த பராசக்தி. மிகவும் அழகான திருவுருவம். தெற்கு பார்த்த சந்நிதி. நுழைவாயிலுக்கு மேற்புறமாக கருடன் சிவபெருமானை வழிபடும் சுதைச்சிற்பம் காணப்படுகின்றது. கோஷ்டத்து மூர்த்தங்கள் யாவும் அழகாக இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் விநாயகப் பெருமான், இடும்பன், தண்டபாணி, குடவாசல் குமரன், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், ஆனந்த கூத்தன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஏகபாத மூர்த்தியின் வடிவம் அபூர்வமானதாகவும் அழகாகவும் இருக்கின்றது. குளக்கரையில் ஆதி கஜானனர் கோவில் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.