அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் திருக்கோவில் (திருப்பெருவேளூர் - காட்டூர் ஐயன்பேட்டை)
God Name : மூலவர்: அபிமுக்தீஸ்வரர் எனப்படும் பிரியாத நாயகேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மோகினி அவதாரம் எடுத்த திருமால், அந்த அவதார நோக்கம் நிறைவேறியதும், இவ்விறைவனை வழிபட்டு தன் ஆண் வடிவினைப் பெற்றார் என ஸ்தல வரலாறு. முருகப் பெருமான் இத்தலத்தில் தனது பெயரால் தீர்த்தம் ஒன்றை அமைத்து, சிவபெருமானை வழிபட்டுள்ளார். வேள் வழிபட்டதால் வேளுர் எனப்பட்டது. தவிர பெருவேள் என்ற அரசன் ஆட்சி செய்துள்ளான்.
ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் போட்டி நடந்த ஸ்தலம். அந்த சண்டையில் பிளக்கப்பட்ட கயிலாய மலையின் ஒரு துண்டு இங்கே விழுந்து, சுயம்பு லிங்கமாக உருவெடுத்தது என்பர்.
தான் கொண்ட சாபத்திலிருந்து விடுபட எண்ணிய சுக்ராச்சாரியார் இத்தலம் வந்து சரவணப் பொய்கையில் நீராடி, அம்பிகையை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். இதனால் சுக்கிர நீச பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
மூலவர்: அபிமுக்தீஸ்வரர் எனப்படும் பிரியாத நாயகேஸ்வரர், அம்பாள்: ஏலவார் குழலி எனப்படும் மின்னனையாள்.
கோச்செங்கட்சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. கட்டுமலை மீது 18 படிகள் மீது ஏறிச் சென்று மூலஸ்தானத்தை தரிசிக்க வேண்டும்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான அபிமுக்தீஸ்வரர். பிரியா ஈஸ்வரர், பிரியாத நாயகேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. சதுர ஆவுடையின் நடுவே சுயம்புவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
அம்பாள் ஏலவார் குழலி எனப்படும் மின்னனையாளுடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அபினாம்பிகை, நிறை கொண்ட நாயகி என்ற பெயர்களும் உண்டு என்று கூறுவர். ஜபமாலையும், தாமரையும் கொண்ட மேற்கரங்களுடனும், அபய - வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்கரங்களுடனும் காணப்படுகின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்களும், வலச்சுற்றின் பரிவாரத் தெய்வங்களும் அழகுற அமைந்துள்ளன. ராமலிங்கேஸ்வரர், சரஸ்வதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தாரகேஸ்வரர் ஆகிய லிங்கத் திருமேனிகளைப் பிரகாரத்தில் தரிசிக்கலாம். ஆனந்த விநாயகர் அற்புதமான அழகுடன் காணப்படுகின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.