அருள்மிகு கரவீரேஸ்வரர் திருக்கோவில் (திருக்கரவீரம் - வடகண்டம்)
God Name : கரவீரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
'கரவீரம்' என்பதற்கு 'பொன் அரளி' எனப் பொருள். ஸ்தல விருட்சமே பொன் அரளியாக இருப்பதால் இவ்வூர் கரவீரம் எனப் பெயர் கொண்டது.
சிங்கத்துவஜன் எனும் அரசன் வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றபோது, பரத்வாஜ முனிவர் தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். அரசன் வந்திருப்பது தெரிந்தும் மரியாதை தரவில்லை எனக் கோபித்து எட்டி உதைத்தான்.
"தன்னுடைய தவம் கலையக் காரணமாயிருந்த இவன் கழுதையாகட்டும்" என சபித்து விடுகிறார் முனிவர். செய்த தவற்றிற்கு வருந்தி பிராயச்சித்தம் வேண்டி நின்றான் அரசன். "பொன் அரளி மலர் பூத்திருக்கும் ஸ்தலத்தில் சாப விமோசனம் அடைவாய்" எனக் கூறினார் முனிவர்.
பல ஊர்களுக்கு கழுதையாகச் சென்று சுற்றித் திரிந்த சிங்கத்துவஜன், ருத்ராட்சப் பொதி மூட்டை ஒன்றைச் சுமந்து இத்தலத்திற்கு வர நேரிட்டது. மூட்டையை உதறிவிட்டு, அருகேயிருந்த அனவரத தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் சாபம் நீங்கி பழைய உருவம் கொண்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அன்று உத்திர நட்சத்திர நாள்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: கரவீரேஸ்வரர், அம்பாள்: பிரத்யக்ஷ மின்னம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கரவீரேஸ்வரர். ஆவுடையாருடன் சேர்த்து ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சுயம்பு மூர்த்தம். கரவீர நாதர், பிரம்மபுரீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு.
கிழக்கு பார்த்த சந்நிதி. மூலவருக்கு வலப்புறமாக தனி சந்நிதியில் எழுந்தருளி தரிசனம் தரும் அம்பிகை பிரத்யட்ச மின்னம்மை மிகுந்த வரப்பிரசாதி.
ஸ்தல விநாயகர் ராஜ கணபதி, சுப்ரமண்யர், பைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
கௌதம ரிஷியின் ஜீவ சமாதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.