அருள்மிகு நயனவரதேஸ்வரர் திருக்கோவில் (கண் கொடுத்த வனிதம்)

God Name : நயனவரதேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

பிரம்ம தேவனிடம் வரங்கள் பல பெற்ற கயாசூரன் எனும் அசுரன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவனை சம்ஹாரம் செய்வதற்கு ஒளிமயமான கோடி சூர்ய பிரகாசத்துடன் தோன்றினார் சிவபெருமான். அந்த பிரகாசத்தை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் கண் கூசி கண் பார்வை இழந்தவர்கள் சிவபெருமானை வேண்டி மீண்டும் கண் பார்வை பெற்றனர். இந்நிகழ்வினால் இவ்வூருக்கு கண் கொடுத்த வனிதம் எனப் பெயர் வந்தது. இறைவன் நயனவரதேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். கண் பார்வை மங்கியவர்கள், கண்ணில் புரையோடியவர்கள், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் பிரார்த்தனை செய்யும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. சித்திரை மாத பரணி நட்சத்திர நன்னாளில் நடக்கும் அமுது படையல் விழாவில் மூலிகைகளாலான பிள்ளைக்கறியை பிரசாதமாக உண்பவர்கள் புத்திர பாக்கியம் நிச்சயம் பெறுவர் எனக் கூறப்படுகிறது. இக்கோவில் வளாகத்தை அகழ்ந்தபோது கிடைத்த அபூர்வமான நடராஜர் சிலையை சென்னை பொருட்காட்சி அரங்கத்தில் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
மூலவர்: நயனவரதேஸ்வரர். அம்பாள்: தேவ நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நயனவரதேஸ்வரர். ஐந்தடி உயரம் கொண்ட கற்றூண். அம்பாள் தேவ நாயகி உடன் எழுந்தருளியுள்ளார். ஆடவல்லான், பிச்ச தேவர், கோமாஸ்கந்தர், உமையன்னை ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். அரிவாட்ட நாயனாரின் புடைப்பு சிற்பம் அழகாக இருக்கின்றது. சிறுதொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளத் தேவர் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம். காசிவிஸ்வநாதரை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.