அருள்மிகு ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (ஆண்டான்கோவில்)
God Name : ஸ்வர்ணபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
பார்வதி தேவியுடன் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்த சிவபெருமான், இத்தலத்தின் இயற்கை அழகை
கண்ணுற்று, பு+மியில் இறங்கினார். தனது சூலத்தை பு+மியில் ஊன்றினார். பு+மியிலிருந்து நீர் பெருகி ஓடி வந்தது. ்
இதுவே சூலகங்கை எனப்படுகிறது. அதனருகே ஒரு வன்னி மரம் தோன்றியது. அதனடியே சுயம்புவாக லிங்கத் ்
திருமேனி ஒன்று தோன்றியது.
இதனைக் கண்டு மகிழ்ந்த உமையவள் சூலகங்கை நீரை எடுத்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தாள். தனது ்
பொன் ஆபரணங்களை லிங்கத்திற்கு அணிவித்து அலங்கரித்து அழகு பார்த்தாள்.. பொன் ஆபரணங்களால் ்
பிரகாசித்த லிங்கத்திருமேனி என்பதால் செம்பொன்நாதர் எனும் பெயர் கொண்டார்.
இந்த சுயம்பு லிங்கத்தை பு+ஜித்து சந்தோஷம் அடைந்த உரோமச முனிவர் தேவதச்சனை  ்அழைத்து இங்கு ்
கோவில் கட்ட பணித்தார் என ஸ்தல வரலாறு.
காவிரி ஆற்றை இரண்டாகப் பிரித்து வடக்கு - தெற்காக ஓடி வரச் செய்தார் அகஸ்தியர் பெருமான். ்
வடக்குபுறமாக காவிரி கடு வேகமாக ஓடி வந்ததால் கடுவாய் எனப் பெயர் கொண்டது. ்
(தற்போது குடமுருட்டி எனப்படுகிறது) இவ்வு+ர் புதிய ஊராக தோற்றமளித்த காரணத்தால் புத்தூர் எனும் ்
பெயர்சேர்ந்து கொண்டு கடுவாய்க்கரை புத்தூர் என்றானது. எனினும் தற்போது ஆண்டான்கோவில் ்
என்றே அழைக்கின்றனர்.
ஆறு மாத தூக்கமும், ஆறு மாதம் தூக்கத்திலிருந்து விழிப்பும் என்ற சாபத்தை ப்ரம்மனிடமிருந்து பெற்ற ்
கும்பகர்ணன் விழித்திருக்கும் போதெல்லாம் அனைவரையும் துண்புறுத்தும் வழக்கத்திலிருந்தான். அவனால் ்
இம்சிக்கப்பட்டவர்கள் ஸ்வர்ணாம்பிகையை சரண் அடைந்தனர். அன்னையின் கட்டளைப்படி கும்பர்ணனை ்
தனது தும்பிக்கையால் தூக்கி வீசி எறிந்தார் விநாயகர். இலங்கையில் போய் விழுந்தான் அவன். இதனால் ்
இத்தலத்து விநாயகருக்கு கும்பகர்ண கணபதி எனப் பெயர் வந்தது.
முசுகுந்த சக்ரவர்த்தியிடம்் அமைச்சராக பணியாற்றிய கண்டத் தேவன் என்பவன் இவ்வாலயத்து இறைவனிடம் ்
தீராத பக்தி கொண்டவன். முசுகுந்தனின் விரோதம் கொண்டதால் கண்டத் தேவனின் தலை வெட்டப்பட்டது. ்
வெட்டுண்ட தலை இறைவன் சந்நிதியை நோக்கி ஓடி வந்தது. வழியிலிருந்த நந்தி விலகி ஒதுங்கி நின்றது. ்
சிவபெருமான் கண்டதேவனுக்கு முக்தி அளித்தார். இன்றும் நந்தி விலகியபடியே உள்ளது.
இறைவனே விருப்பப்பட்டு இத்தலத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்தார் என்ற சிறப்பினை கொண்டது. அஷ்டதிக் ்
பாலகர்கள் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கியுள்ளனர்.
தேவார திருத்தலம்
மூலவர்: ஸ்வர்ணபுரPஸ்வரர், அம்பாள்: ஸ்வர்ணாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்வர்ணபுரPஸ்வரர். ஒளி வீசும் அழகிய தேஜோமயத் ்
திருமேனி. நாகாபரணம் சிரஸை அலங்கரிக்க கம்பீரமாக தரிசனம் தருகின்றார். இவருக்கு செம்பொன்நாதர் என்ற ்
பெயரும் உண்டு. சுயம்பு மூர்த்தம். ்
ஸ்வாமி கோஷ்டத்து மூர்த்தங்களுள் நின்ற கோலத்தில் தரிசனம் தரும் விநாயகர் அழகாக இருக்கின்றார்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை ஆறடி உயர அழகிய திருமேனியுடன் நின்ற கோலத்தில் ்
தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்கள். மேற்கரங்களில் அட்சமாலையும் தாமரையும் ஏந்தியுள்ளார். கீழ்க் கரங்களில் ்
அபய முத்திரையும் ஊர்த்துவமும் கொண்டுள்ளார். சிவசேகரி, மற்றும் சிவாம்பிகை ஆகிய திருநாமங்களும் உண்டு.
திருமாளிகைப்பத்தி சந்நிதி ஒன்றில் தரிசனம் தரும்் கும்பகர்ண கணபதியின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ்
வள்ளி - தெய்வயானை உடனாய கல்யாண சுப்ரமண்யர், உத்தர கைலாஸநாதர்,விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், ்
அருணாச்சலேஸ்வரர், சிவகாமி சமேத நடராஜர் மற்றும்  ்மஹாலக்ஷ்மி ஆகிய திருவுருவங்களை வலச்சுற்றின் ்
போது தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.