அருள்மிகு காளிங்கநர்த்தனப் பெருமாள் திருக்கோவில் (ஊத்துக்காடு)

God Name : மூலவர்: ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள்் உற்சவர்: ஸ்ரீ காளிங்க நர்த்தனப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு: காமதேனுப் பசுவின் குழந்தைகளான பட்டி-நந்தினி இருவரும், இவ்வூருக்கருகே உள்ள ஆவூர் சென்று கைலாஸநாதரை வழிபட்டு, பாலாபிஷேகம், பூஜைகள் செய்து வந்தனர். ஊத்துக்காடு ஒரு புஷ்பவனமாக இருந்ததால் பூப்பறிப்பதற்காக தினமும் இங்கு வந்தார்கள். அப்போது நாரத மகரிஷி அவர்களுக்கு புராணக் கதைகளைக் கூறி வந்தார். ஒரு நாள், காளிங்க நர்த்தனக் கதையை கூறிக் கொண்டிருந்தார் நாரதர். காளிங்கனால் குழந்தை கிருஷ்ணனுக்கு ஆபத்து என நினைத்து பட்டியும்-நந்தினியும் தேம்பித் தேம்பி அழுதனர். அவர்களை சமாதானப்படுத்த கிருஷ்ணரே நேரில் வர வேண்டும் என நாரதர் பிரார்த்தித்தார். தனக்கு கஷ்டங்கள் ஏதுமில்லை, காளிங்கனால் ஆபத்து நேரவில்லை என கிருஷ்ணர் நேரில் வந்து சொல்லி ஆறுதல் கூறினார். அதன்படி காளிங்க நர்த்தனக் கோலத்தை காட்டியருளியதாக ஸ்தல வரலாறு. ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் எனப்படும் வேங்கடகவி பிரஸித்தி பெற்ற கிருஷ்ணர் பாடல்களை இயற்றியவர். அலை பாயுதே, பால் வடியும் முகம் போன்ற பாடல்கள் இனிமையானவை. கோகுலாஷ்டமி தினத்தில் உறியடி உற்சவம் நடைபெறும். ரோகிணி நட்சத்திரத்தில் தயிர் அபிஷேகம் செய்தால் விவாஹத் தடை நீங்கும். புத்ர பாக்யம் கிட்டும். ராஹு-கேது தோஷங்கள் விலகும், விஷக்கடியின் பாதிப்பு நீங்கும். இசைக் கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் பிரார்த்தனை செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கும் ஸ்ரீ காளிங்க நர்த்தனப் பெருமாளை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு. நுணுக்கமான சிற்ப வேலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. காளிங்கனின் தலைக்கும், உற்சவரின் பாதத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி உள்ளது. மற்றொரு பாதத்தை நர்த்தன கோலமாக தூக்கியபடி உள்ளார். ஒரு கையை அபய ஹஸ்தமாக கொண்டு, மற்றொரு கையால் காளிங்கனின் வாலைத் தொட்டவாறும் காணப்படுகிறார். எங்குமே பிடிப்பு இல்லை. காளிங்கனுடன் போரிட்டதில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள், முழங்காலுக்கு கீழே, தெரிகின்றன. உற்சவப் பெருமாள் உடன் 'ருக்மணி-சத்யபாமா' தேவியர்கள் உள்ளனர். தாயார் மஹாலட்சுமி தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆலயத்துள் ஸ்ரீ ஆனந்த நர்த்தன கணபதி, ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ஆண்டாள், ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.