அருள்மிகு சந்திரசேகரமூர்த்தி திருக்கோயில் (சந்திரசேகரபுரம்)
God Name : சந்திரசேகரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
சந்திரன் சிவ பூஜை செய்த தலம் இது. சந்திரனுக்கு அருள்பாலித்த இறைவன் சந்திரசேகரர் எழுந்தருளி இருப்பதால், இத்தலம் சந்திரசேகரபுரம் எனப் பெயர் பெற்றது. சந்திரனுடைய தசாபுக்தியினால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து விடுபட இத்தலத்தில் சந்திரனை வழிபட்டால் பரிகாரமாக அமையும்.
சாப விமோசனம் பெறவும், இழந்த கலைகளை மீண்டும் பெறவும், சந்திரன் ஒவ்வொரு சிவாலயத்திற்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு, ஒவ்வொரு கலையாக மீண்டும் பெற்று, கடைசியாக இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு 64வது கலையைப் பெற்று, வசீகர முகத்துடன் திகழ்ந்தான். இறைவனும் தனது ஜடாமுடியில் சூடிக் கொண்டார் என்பது தல வரலாறு. சந்திரன் அடைக்கலம் பெற்றதால் இவ்வூர் சந்திரசேகரபுரம் என்றானது.
மூலவர்: சந்திரசேகரர், அம்பாள்: சௌந்தராம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சந்திரசேகரர் எழுந்தருளியுள்ளார். ஒளி வீசும் அழகிய திருமேனி.
மகா மண்டபத்தின் வடக்கே அம்பாள் சௌந்தராம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
கோஷ்ட மூர்த்தங்களுள் அஷ்டபுஜ துர்க்கையின் வடிவம் அழகாக உள்ளது. சிறப்பு மூர்த்தியாக சூலினி துர்க்கை எழுந்தருளியுள்ளார். வரப்பிரசாதியாக சங்கடஹர விநாயகர் அருள்பாலிக்கிறார். கல்லால் ஆன மூலத்திருமேனியாக நடராஜப் பெருமானின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
உள் மண்டபத்தின் சுவரில் தெற்கு நோக்கியவாறு ரோகிணி - கார்த்திகை சகிதமாக சந்திரன் புடைப்பு சிற்பமாக எழுந்தருளியுள்ளார்.
மனோன்மணி அம்பாளும், சூலினி துர்க்கையும் இரண்டு சக்திகளாக எழுந்தருளியுள்ள தலம் இது. குபேர திசையில் காமாட்சி அம்மன் சந்நிதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.