அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் (ஆலங்குடி)

God Name : மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர், விசேஷ மூர்த்தி: ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

கஜமுகாசுரனின் இம்சைகளால் அவதியுற்ற தேவர்களிடம் கலங்க வேண்டாம் என அபயம் அளித்து அசுரனை சம்ஹாரம் செய்ததால் ஸ்தல விநாயகர் கலங்காமல் காத்த விநாயகர் எனப் பெயர் பெற்றார். பாற்கடலைக் கடையும்போது உண்டான ஆலகால விஷத்தினால் ஏற்பட்ட அனல்காற்றின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவித்த இந்திராதி தேவர்களைக் காப்பாற்ற, சிவபெருமான் ஆலமாகிய விஷத்தை எடுத்து குடித்து விட்டார். (ஆலம் - குடி). இதனால் இவ்வூருக்கு ஆலங்குடி எனப் பெயர் வந்தது. ஆபத்து வந்ததும் ஓடோடி வந்து காப்பாற்றியதால், இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என திருநாமம் கொண்டார். பூளை என்பது வெற்றிக்கு அடையாளமாக சூட்டப்படும் ஒரு வகை அரிதான மலர். பூளைச்செடிகள் மிகுந்து காணப்பட்ட ஆரண்யமாக இருந்ததாலும், இவ்வூரின் கிழக்கே பூளை வள ஆறு ஓடுவதாலும் தேவார காலத்தில் இவ்வூர் இரும்பூளை எனப் பெயர் பெற்றது. துலா மாசத்தில் இந்த ஆற்றின் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். காவிரியின் உபநதியான வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்து வேகமாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில், இவ்விறைவனை தரிசிக்க வந்த சுந்தரர் ஆற்றின் மறு கரையில் நின்று தவித்துக் கொண்டிருந்தார். இறைவன் ஓடக்காரனாக வந்து அக்கரை சேர்ப்பதாக கூறி, ஓடத்தில் ஏற்றிக் கொண்டார். நடு ஆற்றில் சுழல் ஒன்றை உண்டாக்கி, பற்று கோலை நழுவ விட்டு, தண்ணீரினில் விழுந்து, தத்தளிப்பவன் போல் பாசாங்கு செய்தார். செய்வதறியாது திகைத்து நின்ற சுந்தரருக்கு ரிஷபாரூடராய் காட்சி தந்து, பின்னர் கரை சேர்த்தார் என புராண வரலாறு. அதனால் ஆபத்சகாயர் என்ற பெயர் கொண்டார். முசுகுந்த சக்ரவர்த்தியின் மந்திரியான அமோதகர் என்பவர் கோவில் திருப்பணிகளுக்கு அவர்தம் சொந்த பணத்தை செலவு செய்து புண்ணியம் தேடிக் கொண்டார். இதனால் கோபம் கொண்ட சக்ரவர்த்தி மந்திரியின் தலையை துண்டிக்க ஆட்களை அனுப்பினார். கட்டளையை நிறைவேற்ற வந்த ஆட்களுக்கு மனம் வரவில்லை. நேர்மையான மந்திரியோ சக்ரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றும்படி வற்புறுத்தி நின்றார். அதற்குள் ஆபத்சகாயர் தோன்றி மந்திரியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்து முக்தி அளித்து விட்டார். ஜீவன் பிரியும்போது 'அமோதகா, அமோதகா' என கோவிலெங்கும் ஒலி எழும்பியது என ஸ்தல வரலாறு. இதனால் பிரம்மஹத்தி தோஷம் கொண்ட முசுகுந்தன் இத்தலம் வந்து ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியை சரணடைந்து வழிபட்டு தனது தோஷங்களைப் போக்கிக் கொண்டார் என ஸ்தல வரலாறு. சோழ மன்னன் ஒருவன் சுந்தரரின் விக்ரஹத்தை இவ்வூரிலிருந்து திருவாரூருக்கு எடுத்துச் சென்று, அதற்கு காவலும் போட்டான். அர்ச்சகரின் கனவில் தோன்றிய சுந்தரர் தான் வைசூரி போட்ட குழந்தையாக மாறி விடுவதாகவும், வைத்யரிடம் எடுத்துச் செல்வது போல் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள் என்றும் கூறினார். அவ்வாறே அர்ச்சகரும் செய்ய, காவலாளிகள் ஏமாந்தனர் என வரலாறு. அந்த சிலை வைசூரி தழும்புகளுடன் இன்னமும் ஆலங்குடியிலேயே உள்ளது. ஆதிசங்கரர் இவ்வாலயத்திற்கு வந்து ஆபத்சகாயேஸ்வரரை தரிசித்து, ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியை ஸ்தோத்திரம் செய்துள்ளார். தேவாரத்திருத்தலம் - பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களுள் ஒன்று - நவக்ரஹ ஸ்தலங்களுள் ஒன்று - குரு ஸ்தலம்.
மூலவர்: ஆபத்சஹாயேஸ்வரர், அம்பாள்: ஏலவார் குழலி, விசேஷ மூர்த்தி: ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி. ராஜகோபுரத்தைக் கடந்ததும் நாம் முதலில் தரிசித்து ஆசி பெறும் ஸ்தல விநாயகரான கலங்காமல் காத்த விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஆபத்சஹாயேஸ்வரர். அழகிய திருமேனி கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். இவருக்கு ஸ்ரீ இரும்பூளைநாதர், ஸ்ரீ காசி ஆரண்யேச்வரர், ஆலங்குடியான் ஆகிய திருநாமங்களும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. மூலவரின் தெற்கு கோஷ்டத்தில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். அபய ஹஸ்தம் கொண்டு வீராசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். திருமுகத்தின் அழகு கண்களையும் மனதையும் விட்டு அகலாது. காலடியில் முயலகனும், இருபுறங்களில் சனகாதி முனிவர்களும் காணப்படுகின்றனர். உற்சவ மூர்த்தியை நடராஜருக்கு பக்கத்திலே தரிசிக்கலாம். மூலவரைப் போன்றே உற்சவ விக்ரஹமும் பேரெழில் கொண்டு இருக்கின்றது. உட்பிரகார வலச்சுற்றில் - சூரியேசர், சோமேசர், குருமோக்ஷேசுரர், சோமநாதர், சப்தரிஷிநாதர், விஷ்ணுநாதர், பிரம்மேசர் ஆகிய சப்த லிங்கங்களையும், விசாலாட்சி உடனாய விஸ்வநாதரையும், அகஸ்தியரையும், நடராஜர் சபையையும் தரிசிக்கலாம். ஆக்ஞா கணபதி, சோமாஸ்கந்தர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சந்திரசேகரர், கல்யாண சாஸ்தா, சப்த மாதர்கள் என அனேக உற்சவ திருவுருவங்களை கண்டு மகிழலாம். சுந்தரமூர்த்தி நாயனாரின் விக்ரஹம் சோமாஸ்கந்தர் சந்நிதியில் இருக்கின்றது. திருமேனியில் வைசூரி தழும்புகள் காணப்படுகின்றன. மூன்றரை அடி உயரம் கொண்ட அழகிய விக்ரஹம். அர்த்த மண்டபத்தில் பள்ளியறை சொக்கரும் போக சக்தி அம்மையும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஏலவார் குழலி நின்ற திருக் கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். வெளியே சுக்ரவார அம்மனும் சனீஸ்வர பகவானும் சந்நிதி கொண்டுள்ளனர். வட கோஷ்டத்தில் சண்டேசுரரை அடுத்து ஞான கூபம் எனும் தீர்த்தக் கிணறு உள்ளது. பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களுள் பூளை வனம். தரிசிக்க உகந்த நேரம் - மாலை 5.30 மணி - 6.30 மணி - சாயரட்சை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.