அருள்மிகு கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் (வடுவூர்)

God Name : மூலவர்: கோதண்டராமர்் உற்சவர்: கோதண்டராமர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

தஞ்சை அரசர், இந்த கிராமத்தை பண்டிதர்களுக்கு தானமாக கொடுத்ததால் ஏகாதசி கிராமம் என வழங்கலாயிற்று. வகுளாரண்யம், பாஸ்கர க்ஷேத்ரம், தட்சிண அயோத்தி என்றெல்லாம் போற்றப்படும் ஊர் வடுவூர். "ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தாய்" என்று வாலியின் மூலம் கம்பன் புகழ்ந்த ஸ்ரீ ராமரின் வடிவம் தரும் வடிவழகால் "வடிவு - ஊர்" எனப் பெயரற்று பின்னர் மருவி வடுவூர் என்றானதாக கூறப்படுகிறது. ஸ்ரீ ராமன், தண்டகாருண்யத்தில் எழுந்தருளி, பின்னர் அங்கிருந்து புறப்படும்போது, அவரை போகக் கூடாதென வேண்டி நின்ற முனிவர்களை சந்தோஷப்படுத்த, தன்னைப் போன்ற வடிவுள்ள சிலையை தந்துவிட்டு சென்றார். ஏதோ ஒரு கலகம் விளைந்தபோது இந்த விக்ரஹத்தையும், இதர மூர்த்திகளையும் தலைஞாயிறு எடுத்துச் சென்று, பூமியில் புதைத்ததாகவும், பின்னர் தஞ்சை மன்னன் கனவில் தோன்றிய ராமர், தாம் புதையுண்டு இருக்கும் இடத்தை தெரியப்படுத்தி விளக்கியதாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது. தஞ்சை மன்னன் அவற்றை தோண்டி எடுத்து வெளிக்கொணர்ந்து, தஞ்சைக்கு எடுத்துப்போகும் வழியில் இங்கு தங்கினார். ராமனின் வடிவழகில் மயங்கிய இவ்வூர் மக்கள், ராமரை இங்கு பிரதிஷ்டை செய்யாது எடுத்துப் போனால், மொட்டைக் கோபுரத்திலிருந்து குதித்து உயிரை விடுவோம் என மன்றாடினர். தஞ்சை மன்னனும் சிலைகளை இங்கேயே விட்டுவிட்டு சென்றதாக செவி வழி கதை ஒன்று இருக்கிறது. "ராமாய ராம பத்ராய ராம சந்த்ராய வேதஸே .. .. ரகுநாதாய நாதாய சீதாயா: பதயே நம:" அபிமான ஸ்தலம்.
மூலவர்: கோதண்டராமர்் உற்சவர்: கோதண்டராமர்் தாயார்: செங்கமலம். மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கோதண்டராமர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. கம்பீரமான தோற்றம். சீதா தேவி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோர் உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். செங்கமலத் தாயார் மிகுந்த வரபிரசாதி என்பர். மூலவருக்கும் உற்சவருக்கும் ஸ்ரீ கோதண்டராமன் என்றே திருநாமம். சர்வாலங்காரங்களுடன் உற்சவர் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்பும் ஏந்தி ஒய்யார எழில் கோலத்தில் நிற்கும் கோலத்தை கண்டால் "அந்தம் இல் அழகன் - ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்" எனும் கம்பனின் வர்ணனை நினைவிற்கு வருகிறது. ஆதியில் இங்கு இருந்த ஆதி பெருமாள் ஸ்ரீ ராஜகோபாலன், ருக்மணி - சத்யபாமா தேவியர்களுடன் திருப்பள்ளி அறைக்குள் எழுந்தருளி நித்யாராதனம் கண்டருளி வருகின்றார். ஸ்ரீ ஹயக்ரீவர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஆகிய மூர்த்தங்களை தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். தேரடியில் ஸ்ரீ ஆஞ்சநேயமூர்த்தி எழுந்தருளியுள்ளார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.