அருள்மிகு சர்ப்பபுரீஸ்வரர் திருக்கோவில் (பாமணி)
God Name : நாகநாதர் எனப்படும் சர்ப்பபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
பாதாளத்தில் இருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டமையால், இவ்வூரை தேவார காலத்தில் 'திரு பாதாளேச்சரம்' என்று அழைத்தனர். இவ்விறைவனை 'திரு பாதாளீச்சரம் உடையார்' என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
தனஞ்செய முனிவர் வடிவில் ஆதிசேஷன் பாம்பு உடலும் மனித முகமும் கொண்டு வந்து இவ்விறைவனை வழிபட்டார் என்றும், அதே வடிவத்தில் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
காமதேனுப் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபட்டது என்றும், அப்போது முட்டியதால் லிங்க வடிவம் மூன்று பிரிவுகளாயின என்றும் கூறுவர். இந்த மூன்று பிரிவுகளும் செப்புத்தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பச்சை திராட்சை, மாங்கனி, மாம்பழச்சாறு ஆகியன விசேஷ நைவேத்தியங்களாகச் செய்யப்படுகின்றன.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: நாகநாதர், அம்பாள்: அமிர்த நாயகி.
மூலஸ்தானத்தில் நாகநாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு லிங்க மூர்த்தம். பாம்பு போன்ற வடு லிங்கத் திருமேனியில் காணப்படுகிறது. இது முப்பிரிவாக அமைத்து செப்புத்தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்வாமிக்கு சர்ப்பபுரீஸ்வரர், பாம்பணிநாதர் ஆகிய பெயர்களும் உண்டு.
அம்பாள் அமிர்த நாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகிறாள்.
ஆதிசேஷன் தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகிறார். தனஞ்ஜெய முனிவரின் திருவுருவம் உள்ளது.
ஆதிசேஷன், பதஞ்சலி போல பாம்பு உருவமுள்ள தனஞ்ஜெய முனிவராக அவதரித்து, புற்றிலிருந்து வெளிப்பட்டு, பசுவுக்கு அருள் புரிந்ததை விளக்கும் சித்திரங்கள் இங்கு உள்ளன.
சிம்ம தட்சிணாமூர்த்தி ஒரு சிறப்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.
ஸ்வாமிக்கு இரண்டு திருமுகங்கள் தோன்றுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.