அருள்மிகு ஜெயங்கொண்டநாதர் திருக்கோவில், மன்னார்குடி
God Name : ஜெயங்கொண்டநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: ஜெயங்கொண்டநாதர், அம்பாள்: பிரஹந்நாயகி.
மூலஸ்தானத்தில் மூலவரான ஜெயங்கொண்ட நாதேஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வியாச முனிவர் பிரதிஷ்டை செய்த அழகிய லிங்க மூர்த்தம் இது. அம்பாள் பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி வரப்பிரசாதியாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
பிரகார வலத்தில் கணபதி, முருகன், நால்வர், பைரவர் ஆகிய மூர்த்தங்களையும், மண்டபத்தில் அஸ்திர தேவர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிரதோஷ நாயகன், பிடாரி, கோவிலைக் கட்டிய சோழ மன்னன் (ராஜாதிராஜன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு இங்கிருந்து திரட்டுப்பால் அனுப்புவது வழக்கம். முனிவர்களுக்கு கிருஷ்ண லீலைகளைக் காட்டிய பெருமாள் சோர்ந்திருந்தபோது அனுப்பிய திரட்டுப்பால் இன்று வரை தொடர்வதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
120 சேர் பசும்பால், நாட்டுச்சக்கரை, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைச் சேர்த்து திரட்டுப்பால் செய்வார்கள். இது சைவ - வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்குகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.