அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் (மன்னார்குடி)
God Name : சுந்தரேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
கண்ணனின் லீலைகளைக் கண்டு மகிழ்ந்த கோபிலர் - கோபிரளயர் எனும் முனி சிரேஷ்டர்கள், சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களைக் காண வேண்டி, பாமணி நதிக்கரையில் பர்ணசாலை அமைத்து தவம் மேற்கொண்டனர். அவர்களது தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான் ரிஷப வாகனத்தில் மீனாட்சியோடு காட்சி தந்தார் எனவும் அவர்கள் வேண்டியபடி அறுபத்திநான்கு திருவிளையாடல்களையும் காட்டியதாகவும் ஸ்தல வரலாறு. 12 மாத பௌர்ணமி தினங்களிலும் விசேஷ ஆராதனைகள் நடத்துகின்றனர்: சித்திரை - மரிக்கொழுந்து, வைகாசி - சந்தனம், ஆனி - முக்கனி, ஆடி - பால், ஆவணி - சர்க்கரை, புரட்டாசி - அதிரசம், ஐப்பசி - அன்னம், கார்த்திகை - தீபம், மார்கழி - பசுநெய், தை - கருப்பஞ்சாறு, மாசி - கம்பளம், பங்குனி - பசுந்தயிர் என்று சிறப்பு ஆராதனைகள் செய்கின்றனர். பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடத்திக் காட்டப்படுகிறது.
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: மீனாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பிகை மீனாட்சி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.