அருள்மிகு ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் (கெழுவத்தூர்)
God Name : ஜடாயுபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஜடாயுபுரீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். அழகிய திருமேனி.
ஜடாயு வழிபட்டு பூஜித்ததால் ஜடாயுபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
அம்பாள் சௌந்தரநாயகி பெயருக்கேற்றாற்போல் சௌந்தர்யமாக உள்ளார். அட்சமாலை, தாமரை, அபய - வரத ஹஸ்தங்கள் என சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
ராசி மண்டல தட்சிணாமூர்த்தி ராஜ சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ளார். அனைத்து ராசிகளுக்கும் அதிபதியாக விளங்குகிறார்.
நந்தி மண்டப தூண்களில் ஜடாயுவும், அதிகார நந்தியும், அஷ்டதிக் பாலகர்களும் இடம் பெற்றுள்ளனர். கோபுர வாயிலிலுள்ள தூணில் தசகண்ட ராவணனுடன் ஜடாயு போரிடும் காட்சி, அழகிய சிற்பமாக காணப்படுகின்றன.
காமாட்சி அம்மன், கைலாஸநாதர், சஹஸ்ரலிங்கம், சாந்தநாயகி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
ஸ்ரீ ராமர், ஜடாயுவின் உத்திரகிரியை செய்த இடம், கல் நிறுத்திய இடம் களப்பால் போன்ற சிற்றூர்கள் அருகே உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.