அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில் (திருமக்கோட்டை)
God Name : திருமெய்ஞானபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
மிளகுப் பொதிகளை ஏற்றிய வண்டியுடன் ராமேஸ்வரம் செல்லும் வியாபாரி ஒருவன், செல்லும் வழியில் இவ்வூர் சுங்கச்சாவடியில், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, பயறு மூட்டைகள் எனப் பொய்யுரைத்தான். பயறு மூட்டைகளுக்கான குறைந்த வரியை கோவிலுக்கு செலுத்திவிட்டு, சிறிது தூரம் பயணித்துவிட்டு, மூட்டைகளைப் பார்த்தால் அத்தனையும் பயறு மூட்டைகளாகவே இருந்தன.
பொய்யுரைத்ததால் ஏற்பட்ட விளைவுகளுக்கு வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டினான். தினமும் அர்த்தஜாம பூஜை நைவேத்தியத்திற்கு மிளகு அன்னம் செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக வேண்டிக்கொண்டான்.
பயறு மூட்டைகள் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாறின.
(பைங்கா நாடு - மன்னார்குடிக்கு தெற்கே 6 கி.மீ தூரத்தில் சபாபதீஸ்வரர் கோவில் உள்ளது.)
மூலவர்: திருமெய்ஞானபுரீஸ்வரர், அம்பாள்: பிரஹந்நாயகி.
மூலஸ்தானத்தில் திருமெய்ஞானபுரீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார். சுயம்பு மூர்த்தம்.
கிழக்கு நோக்கிய சந்நிதி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் பிரஹந்நாயகி எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தில் 16 வித கணபதியின் திருவுருவங்கள் இருப்பதால் ஷோடஸ கணபதி ஸ்தலமாக கருதப்படுகின்றது.
கோஷ்ட தெய்வங்கள் அழகுற அமைந்துள்ளன. விஸ்வநாதர், பிரஹதீஸ்வரர், லட்சுமி, சரஸ்வதி மற்றும் வள்ளி, தெய்வயானை உடனாய முருகப்பெருமான் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
தரிசன கணபதி, சொக்க விநாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், கால பைரவர், சூரிய - சந்திரர்கள், சிவகாமி உடனாய நடராஜர், அஸ்திரத்தேவர், பிரதோஷ நாயகர், சாயரட்சை விநாயகர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
மண்டபத்தில் மிளகு வியாபாரி ஒருவரின் உருவமும், திருக்குள படித்துறையில் பிரம்ம தண்டமும், தூண் உச்சியில் நந்தி தேவரும், ராமர் பாதமும் காணலாம். கோவிலின் நான்கு திக்குகளிலும் நான்கு குளங்களும், கோவிலுக்கு முன்பாக ஞான தீர்த்தமும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.