அருள்மிகு வெண்டுறைநாதர் திருக்கோவில் (திருவெண்டுறை)
God Name : திரு வெண்டுறை நாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
சிவபெருமானை அல்லாது பிற தெய்வங்களைத் தொழக் கூடாது என வைராக்கியம் கொண்டிருந்த ப்ருங்கி முனிவர், தம்மைப் பொருட்படுத்தவில்லை எனக் கோபமுற்ற அம்பிகை, ப்ருங்கி முனிவரின் குருதி மற்றும் சதை ஆகியன அகலச் செய்தார். இறைவனருளால் அவற்றை மீண்டும் பெற்றார் முனிவர். (இதன் பின்னர்) உமாதேவியும் (இறைவனுடன்) இணைந்து மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்) என்றானார்.
அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் கொண்டதால், (ப்ருங்கி முனிவர்) வண்டு ரூபம் கொண்டு, (இறைவனின்) திருவுருவத்தைத் துளைத்து வழிபட்டார். அதன் காரணமாக, வண்டின் ஓசை கர்ப்பக்ரஹத்தில் கேட்டுக் கொண்டே இருப்பதாகக் கூறுகின்றனர். வண்டு உறைந்த தலம் என்பதே வண்டுறை ஆகி, இப்போது திருவெண்டுறை என்றானது.
மூலவர்: திரு வெண்டுறை நாதர்் அம்பாள்: வேல் நெடுங்கண்ணி.
மூலஸ்தானத்தில், மூலவரான திரு வெண்டுறை நாதர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு லிங்க மூர்த்தம். மதுவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பாள் வேல் நெடுங்கண்ணி, சத்யதாயதாக்ஷி என்றும் அழைக்கப்படுகிறார், எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
நந்தியின் பின்புறமாக நின்று, நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே மூலவரை தரிசிக்கும்படியான சிறப்பு அமைப்பைக் கொண்ட ஸ்தலம் இது.
பிரகார வலச் சுற்றில் பிள்ளையார், முருகன், பிட்சாடனர், ரிஷபாரூடர், தட்சிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்களைத் தரிசிக்கலாம்.
பிரம்மா, திருமால், அரிச்சந்திரன், துருவன், வித்யாதரர், ப்ருங்கி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம் இது.
முன் மண்டபத் தூணில், நான்கு யுகங்களைக் கண்ட ஆஞ்சநேயரின் திருவுருவத்தைச் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.