அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் (திருக்கோட்டூர்)

God Name : கொழுந்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

நாரதரின் சாபத்தால் பூலோகம் வந்த ரம்பை, இத்தலத்து வன்னி மரத்தடியில் மூலமாய் முளைத்தெழுந்த கொழுந்தீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றாள். ரம்பையைக் காணாததால், ஐராவதத்தை அனுப்பி தேடி வரச் சொன்னான் இந்திரன். அகங்காரத்தில் செயல்பட்ட ஐராவதம், பூஜித்துக் கொண்டிருந்த ரம்பையை, சிவலிங்கத்துடன் சேர்த்து இழுத்தது. சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட இறைவன் ஓங்கி உதைத்ததால் ஐராவதம் அழிந்தது. பின்னர் செய்த தவற்றிற்கு வருந்தி மன்னிப்பு கோரி, இறைவனை வழிபட்டது என ஸ்தல வரலாறு கூறுகிறது. வன்னிமரத்தடி. ஐராவதத்தின் கொம்புகளால் (கோட்டால்) அகழப் பெற்றதால் இவ்வூரை கோட்டூர் என அழைக்கின்றனர். மேற்கே உள்ள இந்தக் கோவில் தேவாரம் பெற்றது. கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணி அம்பலம் திருவசைப்பா கொண்டது. 9 தீர்த்தங்களுள்ள ஸ்தலம் என்பர். தேவாரத்திருத்தலம்.
மூலவர்: கொழுந்தீஸ்வரர், அம்பாள்: தேன் மொழியாள் எனப்படும் மதுரபாஷிணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கொழுந்தீஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். ரம்பை வழிபட்டதால் அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதியில் தேன் மொழியாள் எனப்படும் மதுரபாஷிணி தரிசனம் தருகின்றாள். வல்லப கணபதி, சுப்ரமண்யர், உமா மகேஸ்வரர், அகோர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், மீனாட்சி - சுந்தரேசர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். பிரகாரத்தில் ரம்பையின் தவக்கோலம் காணலாம். சபா நடராஜர் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.