அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில் (திருக்களர்)
God Name : பாரிஜாதவனேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
தேவலோக மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து, இத்தலத்தைப் பாரிஜாதவனமாக்கி, தீர்த்தம் ஒன்றையும் உண்டாக்கினார் துர்வாசர். பாரிஜாத மரத்தடியில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். தனக்கும் நடன தரிசனம் தந்தருள வேண்டுமென்று இறைவனிடம் விண்ணப்பித்தார்.
அவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், துர்வாசருக்கு பிரம்ம தாண்டவ தரிசனம் தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
'களரி' என்றால் சபை. துர்வாச முனிவர்க்கு 'களரியாட்டம்' எனும் நடன தரிசனம் தந்தவர் இவ்விறைவன். ஆகையால், 'களரி' எனப் பெயர் கொண்டு நாளடைவில் 'களர்' என மாறியதாகக் கூறுவர். களர் நிலத்தில் உள்ளதால் இப்பெயர் கொண்டதாகவும் கூறுவர்.
இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: பாரிஜாதவனேஸ்வரர், அம்பாள்: இளங்கொம்பன்னாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மூலவரான பாரிஜாதவனேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு களர் முளை நாதேஸ்வரர், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் ஆகிய பெயர்களும் உண்டு. சிறப்பு மூர்த்தமாக மோட்சதுவாரேஸ்வரர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் அன்னை இளங்கொம்பன்னாள் தரிசனம் தருகின்றாள். இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பர். விசேஷ தினங்களில், 60 பவுனில் செய்த தங்க கவசம் அணிவிக்கின்றனர். அமுதவல்லி, அழகேஸ்வரியம்மை ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.
வலம்புரி விநாயகர், முருகப் பெருமான் ஆகியோரை தரிசித்து, அடுத்துள்ள சந்நிதியில் நடராஜப் பெருமானை தரிசிக்கலாம். இவரது சந்நிதியில் உள்ள பேழையில் விடங்கர் லிங்கத்தை தரிசிக்கலாம். துர்வாச முனிவரின் திருவுருவம் நடராஜருக்கு எதிரே உள்ளது.
இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி - தெய்வயானை இல்லாமல் குரு வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார். கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுகின்றனர்.
ராஜகோபுரத்தில் ம்ருத்யுஞ்ஜயர், மஹாசதாசிவர், ஊர்த்துவ தாண்டவர் ஆகிய சிற்பங்களையும், விமானத்தில் பல அரிய சிற்பங்களையும் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.