அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக் கோவில் (திரு உசாத்தானம் - கோயிலூர்)
God Name : மந்திரபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
ஸ்ரீ ராமர் இலங்கை செல்லும் முன் இவ்விறைவனை வழிபட்டு மந்திர உபதேசம் பெற்றார். இதனால் இவ்விறைவனுக்கு 'மந்திரபுரீஸ்வரர்' என்ற பெயர் வந்தது. (கடலில் அணை கட்டும் முறைகளை இங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது.)
இத்தலம் 'உசாத்தானம்' எனப் பெயர் கொண்டது.
அஷ்டாவக்ரன் என்ற முனிவரின் சாபத்திற்காளான வருணன், மந்திரபுரீஸ்வரரை வழிபட்டு தனது நோய் நீங்கப் பெற்றார்.
ஸ்ரீராமர், லக்ஷ்மணர், ஜாம்பவான், சுக்ரீவன், ஹனுமன், இந்திரன், விஸ்வாமித்ரர், வருணன் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர். விஸ்வாமித்ரருக்கு நடனக் கோலம் காட்டியருளிய ஸ்தலம் இது.
ஆதிசேஷனே பதஞ்சலி முனிவர் வடிவில் இருந்தபோது இக்கோவிலைக் கட்டியதாக சூதபுராணம் கூறுகின்றது. இந்த இடம் முன்பு மாமரக்காடாக இருந்தமையால் 'சூதவனம்' எனப் பெயருற்றது.
இங்குள்ள மார்க்கண்டேய தீர்த்தத்தில் நீராடினால் சரும வியாதிகள், முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்குவதாக கூறுகின்றனர்.
மூலவர்: மந்திரபுரீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மந்திரபுரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். சதுர பீடத்தில், வெண்மை நிறமும் சொரசொரப்பும் கொண்ட திருமேனியுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். வடக்குப்புறமாக சாய்ந்த நிலையில் தரிசனம் தருகின்றார். கல்வெட்டுகளில் 'திரு உசாத்தானமுடையார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பாள் பெரியநாயகி எனப்படும் பிரஹந் நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்கள், அதிகார நந்தி, காட்சி கொடுத்த நாதர் ஆகியோரை தரிசித்த பின், பிரகார வலச்சுற்றில் சூதவனப் பிள்ளையார், வீரபத்ரர், காளி, சப்த மாதர்கள், காசி விஸ்வநாதர், ராமர் வழிபட்ட லிங்கம், வருணலிங்கம், மார்க்கண்டேய லிங்கம், ஜ்வரஹரேஸ்வரர், வருண பகவான் ஆகியோரை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.