அருள்மிகு கற்பகநாத சுவாமி திருக்கோயில் (திருக்கடிக்குளம் - கற்பகனார் கோயில்)

God Name : கற்பக நாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

கார்த்திகார்ஜுனன் எனும் அசுரன் சிவபெருமானை வழிபட்டு வரங்கள் பல பெற்றவன். அவன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமே கற்பக நாதர். கற்பக விருட்சத்திற்கு எட்டு கிளைகளிருப்பது போல், லிங்கத்திற்கு எட்டு பட்டைகள் உள்ளன. சிவனடியார் ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது இரண்டு மகன்களையும் அழைத்து, தனது அஸ்தியை புண்ணிய தீர்த்தத்தில் கரைக்க வேண்டும். அப்படி கரைக்கும் போது எங்கு செந்தாமரை மலர்கிறதோ அங்கு என் ஆத்மா சாந்தி அடையும் எனக் கூறி இறந்தான். பல இடங்களிலும் தேடியலைந்து கடைசியாக இவ்வூர் வந்தபோது திருக்கடி என்ற மாட்டுக்குளம்பு அடி வைத்த இடத்தில் தோன்றிய பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் அஸ்தியை கரைக்க, செந்தாமரையும் மலர்ந்தது. இதனால் இவ்வூருக்கு திருக்கடிக்குளம் என்ற பெயர் வந்தது. இவ்வூர் மக்கள் இறந்தவர்களின் அஸ்தியை, இக்குளத்தில் கரைத்து, தீபம் ஏற்றி, இறைவனுக்கு செந்தாமரை மலர் சாத்துகின்றனர். இங்கு வெண்ணெய் தானம் செய்வது சிறப்பானது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: கற்பக நாதர், அம்பாள்: சௌந்தர நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான கற்பக நாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். எட்டுப் பட்டைகளுடன் கூடிய அழகான திருமேனி. கற்பகேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் சௌந்தர நாயகி எனப்படும் பால சுந்தரி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கோயிலுக்கு வெளியில் தென்பக்க மேலண்டைக் கோடியில் கற்பகப் பிள்ளையார் இருக்கின்றார். சிவபெருமானைப் பூஜித்து மாம்பழம் பெற்ற தலம். கோயிலுக்கு வடகிழக்குப் பக்கத்தில் விநாயக தீர்த்தம் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.