அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோவில் (திருத்தங்கூர்)

God Name : வெள்ளிமலைநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

உலகம் முழுதும் பிரளய வெள்ளம் எழும்பி, கடல் நீரால் கபளீகரம் செய்யப்பட்டு வரும் வேளையில், இத்தலத்தில் விருப்பமுடன் எழுந்தருளிய உமையவள் காத்தருள பிரார்த்தித்தாள். உலகம் கடல் நீரால் மூழ்கியும், இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இவ்வூர் திருத்தேங்கூர் எனப் பெயர் கொண்டது. இவ்வளவு சிறப்பு பெற்ற ஸ்தலம் என கேள்விப்பட்டு மஹாலட்சுமி இங்கு தங்கி சிவபூஜை செய்து வந்தாள். இதனால் திருத்தங்கூர் எனவும் பெயர் கொண்டது. நவகிரகங்கள் இத்தலம் வந்து தத்தம் பெயரால் சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டனர். சுமைகளையும் பாவங்களையும் போக்கிக் கொள்ள கங்கை இங்கு வந்து சிவகங்கை எனும் தீர்த்தத்தை உண்டாக்கி நீராடி, இவ்விறைவனை வழிபட்டுள்ளார். 48 தினங்கள் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள். உமையவள், மஹாலட்சுமி, கங்கை, பீஷ்மர், துரோணர், பாண்டவர்கள், நவகிரகங்கள் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். அகலிகை தனது பாவங்களைப் போக்கிக் கொண்டு சிவனருள் பெற்ற ஸ்தலம். தேவாரத்திருத்தலம்
மூலவர்: வெள்ளிமலைநாதர், அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வெள்ளிமலைநாதர். சுயம்பு லிங்க மூர்த்தம். ரஜதகிரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. மார்ச் 18 முதல் 24ந் தேதி வரை சூரிய உதய வேளையில், சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கருவறை வாசலில் மஹாகணபதியும் பாலசுப்ரமண்யனும் எழுந்தருளியுள்ளனர். அம்பாள் பெரியநாயகி உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பிரகார வலச்சுற்றில் நர்த்தன கணபதி, சுப்ரமண்யர், சோமாஸ்கந்தர், துர்க்கை, நடராஜர், மஹாலட்சுமி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். மஹாலட்சுமி பூஜித்த லிங்கம் மஹாலட்சுமி சந்நிதிக்கு எதிரே உள்ளது. சூரிய லிங்கம், சந்திர லிங்கம், அங்காரக லிங்கம், புத லிங்கம், குரு லிங்கம், சுக்ர லிங்கம், சனீஸ்வர லிங்கம், ராஹு லிங்கம், கேது லிங்கம் ஆகிய நவகிரகங்கள் பூஜித்த நவலிங்கங்களை தரிசிக்கலாம். வானுயர்ந்து வாசலில் நிற்கும் இலவமரம், அழகிய குளம் என இயற்கை வளம் சூழ்ந்த இடத்தில் அமைந்த கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.