அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில் (திருநாட்டியத்தான்குடி - பாலக்குறிச்சி)

God Name : ரத்னபுரீஸ்வரர் எனப்படும் மாணிக்கவண்ணர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

சுந்தரமூர்த்தி நாயனார் இக்கோவிலுக்குள் வந்தபோது மூலஸ்தானத்தில் சுவாமியைக் காணாது திகைத்துப் போனார். இங்குள்ள விநாயகரிடம் சுவாமி எங்கே? எனக் கேட்டார். சுவாமி இருந்த இடத்தை விநாயகர் சுட்டிக் காட்டியதால் விநாயகருக்கு கைகாட்டி விநாயகர் என்ற பெயர் வந்தது. விநாயகர் சுட்டிக் காட்டிய இடத்தில் சுவாமியும் - அம்பாளும், உழவன் - உழத்தியாக நெல் வயலில் இறங்கி நடவு நட்டுக் கொண்டிருந்தனர். இந்த அற்புதக் காட்சியை பார்த்து வியந்து போன சுந்தரர் "நட்டது போதும்... கரையேறி வாரும்" என சுவாமியையும் அம்பாளையும் அழைத்து பதிகம் பாடினார் என ஸ்தல வரலாறு. சோழ மன்னன் ஒருவனுக்கும் அவனது தம்பிக்கும் ரத்னங்களை பாகம் பிரித்து தர வேண்டி இருந்ததால் சுவாமி ரத்ன வியாபாரி வேஷத்தில் வந்தார். அதனால் ரத்னபுரீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். மாணிக்கவண்ணர் என்பது தமிழாக்கம். கோட்புலி நாயனார் அவதரித்த ஸ்தலம். தேவாரத்திருத்தலம்.
மூலவர்: மாணிக்கவண்ணர், அம்பாள்: மலைமங்கையம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான மாணிக்கவண்ணர். சுயம்பு லிங்க மூர்த்தம். ஒளிவீசும் தேஜோமய திருமேனி. ரத்னபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. யானை ஒன்று வழிபட்டதால் கரிகாலேஸ்வரர் என்றும் அழைப்பர். அம்பாள் மலைமங்கையம்மை எனப்படும் மங்களாம்பிகை தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகின்றாள். கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றின் பரிவார தேவதைகளும், கைகாட்டி விநாயகரும் அழகான திருவுருவங்களாக உள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.