அருள்மிகு நடுத்தறியப்பர் திருக்கோவில் (கோவில்கண்ணாப்பூர்)
God Name : நடுத்தறியப்பர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
சைவ சமயத்தைச் சார்ந்த பெண்ணொருத்தி வைணவருக்கு வாழ்க்கைப்பட்டாள். தனது கணவருக்கும் மாமியாருக்கும்
தெரியாமல் சிவபூஜையைத் தொடர்ந்து செய்து வந்தாள். கன்றுக்குட்டியை கட்டும் தறி எனப்படும் ஆப்பு - அதனையே
சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டு வந்தாள்.
ஒரு நாள் இந்த செயலைக் கண்டுபிடித்துவிட்ட அவளது கணவன், அந்த தறியைக் கோடரியால் பிளந்தான். அப்போது
அதினின்று வெளிப்பட்டார் சிவபெருமான்.
கன்றுக்குட்டியைக் கட்டும் தறியிலிருந்து உருவான இறைவன் என்பதால் நடுத்தறிநாதர் என்று அழைக்கப்பட்டார்.
இவ்வூரும் கன்றாப்பூர் என வழங்கப்படலாயிற்று. (கன்று - ஆப்பு - ஊர்)
காம்பிலி தேசத்து அரசனான இடும்பன் இவ்விறைவனைப் பிரார்த்தித்து புத்ர பாக்யம் பெற்றார். பஞ்ச பாண்டவர்கள்
இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களால் உண்டாக்கப்பட்ட தீர்த்தமே பாண்டவ நதி.
மூலவர்: நடுத்தறியப்பர், அம்பாள்: ஸ்ரீ வல்லி நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான நடுத்தறியப்பர். சுயம்பு லிங்க மூர்த்தம்.
வஜ்ரதம்புரேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோடரி வெட்டுத்தழும்பை தாங்கியுள்ள திருமேனி.
மாதுமையம்மை எனப்படும் ஸ்ரீ வல்லி நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்ட தெய்வங்களையும், கணபதியின் ஆறு திருவுருவங்களையும், பிரதோஷ நாயகரான அஸ்திர தேவரின்
திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.